தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சரசுவதி கோவில்கள்........

Go down

சரசுவதி கோவில்கள்........ Empty சரசுவதி கோவில்கள்........

Post  amma Sat Jan 12, 2013 2:51 pm


திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில் அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும் தாமரை மலரில் பத்மாஸனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள அரசலாற்று கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும், அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும், கணவன்-மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிரார்த்னைத்தலம் என்று தல புராணம் கூறுகிறது. மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும் இக்காரணம் தொட்டே இதற்கு கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள். வாக்கு வன்மையும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள். நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருக்கண்டியூர்....

திருக்கண்டியூரில் உள்ள கபால தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் சிவபெருமான் முகமாக தானே இவ்விடத்தே கோவில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கியதை கண்டு மனமகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளார். ஆக இது ஒரு மும்மூர்த்தி ஸ்தலமாகும்.

ஸ்ரீரங்கம்.........

திருமாலின் 108 திவ்ய தேச திருத்தலங்களுள் முதன்மையானது. திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் இங்கு மூலஸ்தான மண்டபத்திற்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்துக்கு அருகில் கிழக்கு நோக்கி உள்ள சந்நிதியில் சரஸ்வதிதேவி அமர்ந்த திருக்கோலத்தில் உறைகிறாள். அதே சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வடக்கு நோக்கி சரஸ்வதி தேவிக்கு அருள்பாலித்தபடி அமர்ந்துள்ளார். ஆக, இந்தியாவிலேயே சரஸ்வதி தேவி தன் குருவான திருமாலின் அவதாரமான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருடன் ஒரே சந்நிதியில் அமர்ந்து காட்சி தரும் ஒரே இடம் ஸ்ரீரங்கம் மட்டுமே.

நாகூர்......

நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள நாகூர் என்னும் ஊரில் நாகராசா கோவிலில் சரஸ்வதியின் செப்புத் திருமேனி உள்ளது. அங்கும் சென்று சரஸ்வதி தேவியை வழிபட்டு சிறந்த கல்வியையும் ஞானத்தையும் பெறலாம்.

மு.ஈ.ச. மலை........

பவானிசாகர் அருகில் மாதம்பாளையம் ஊராட்சியில் மாராயி பாளையம் என்னும் கிராமத்தில் ஒரு சிறு மலையில் முருகன், ஈஸ்வரன், சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனி மூலஸ்தான கோவில்கள் உள்ளது. புதியதாக கட்டப்பட்ட இக்கோவில் மலை புஞ்சை புளயம்பட்டியிலிருந்து பவானிசாகர் செல்லும் வழியில் பனையம்பள்ளியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாராயிபாளையத்தில் உள்ளது.

இக்கோவிலுக்கு செல்ல 800 படிகள் கொண்ட பாதையும், கனரக வாகனங்கள் செல்ல தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. வடநாட்டில் புஷ்கரத்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் மலை மீது சரஸ்வதி தேவிக்கு அமைக்கப்பட்ட கோவில் இது ஒன்றே.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum