தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா

Go down

தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா Empty தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா

Post  ishwarya Wed Mar 27, 2013 6:04 pm

தெலுங்கில் இதுவரை எட்டு படங்கள் இயக்கி அத்தனை படத்தையும் ஹிட்டாக்கியர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இது தெலுங்கில் வேறு எந்த இயக்குனரும் செய்திராத சாதனை. மாவீரன், நான் ஈ படங்களின் மூலம் தமிழுக்கும் தெரிந்த முகமானார். அடுத்து அவர் ரஜினியை இயக்கப்போகிறார், இந்தியில் ஆமீர்கானை இயக்கப்போகிறார். தமிழில் கமலை இயக்கப்போகிறார் என ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள் வந்து போய்விட்டன. கடைசியாக பிரசாந்த்தை இயக்கப்போகிறார் என்ற வதந்தியும் பரவிச் சென்றது.

ராஜமவுலி அடுத்து இயக்கப்போவது தெலுங்கில் ஒரு சரித்திரப் படத்தை. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய மாவீரன் ஒரு கற்பனை சரித்திரகதை. அதிலும் பாதி கதைதான் சரித்திரம். இப்போது அவர் இயக்கப்போவது ஆந்திராவில் நடந்த ஒரு வீர சரித்திரக் கதை. அதில் கொஞ்சம் கற்பனை கலந்து இயக்குகிறார். பிரபாசும், ராணாவும்தான் ஹீரோ. இருவரும் வெவ்வேறு நாட்டு இளவரசர்கள். இவர்கள் அனுஷ்கா என்ற இன்னொரு நாட்டு இளவரசிக்காக நடத்தும் ஆட்டங்கள்தான் கதை.

படத்துக்காக வியட்நாமில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் சண்டை பயிற்சியாளர்கள் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மூவருக்கும் குதிரையேற்றமும், வாள் சண்டையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஹீரோக்கள் இருவரையும் விட அனுஷ்காதான் இதில் பாஸ்ட் காரணம் அவர் ஏற்கெனவே ருத்தரம்மாதேவி படத்துக்காக இதனை கற்றுத் தேர்ந்துவிட்டார். ராஜமவுலி படத்துக்கான லொக்கேஷன்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் வாய்ப்பு தேடும் ஷீலா
» திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!
» பார்ட்டிகளில் பட வாய்ப்பு தேடும் சோனியா அகர்வால்
» சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படக்குழு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum