பரிதியப்பர் கோவில்
Page 1 of 1
பரிதியப்பர் கோவில்
ஸ்தல வரலாறு.....
தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு அருகிலுள்ளது பரிதியப்பர் கோவில். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள், சிம்ம ராசி, சிம்ம லக்னம், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், சூரிய தசை நடப்பவர்கள் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் பரிதியப்பரையும், அவர் எதிரேயுள்ள சூரியனையும் வழிபட்டால் அவர்களது தோஷம் விலகி, முன்னேற்றப்பாதை கிடைக்கும்.
ஒரு புறாவுக்காக தன் சதையையே கொடுத்த சிபி சக்கரவர்த்தி, வயதான காலத்தில் சிவத்தலங்களைத் தரிசிக்க புறப்பட்டார். செல்லும் வழியில், ஒரு இடத்தில் குதிரைகளுக்கு புல் வெட்டியபோது, ஒரு புதரில் இருந்த லிங்கத்தை கண்டார். அதற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். லிங்கம் அந்த இடத்திற்கு எப்படி வந்தது? என ஒரு முனிவரிடம் கேட்டார். ஒரு காலத்தில் தட்சன் யாகம் நடத்தியபோது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டான்.
இதனால் அகோர வீரபுத்திரரால் தண்டிக்கப்பட்டான். தோஷம் ஏற்பட்டது. சூரியன் தன்தோஷம் போக்க 16 சிவத்தலங்கள் சென்று வழிபாடு செய்தான். அங்கெல்லாம் நீங்காத தோஷம் இத்தலத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்த போது நீங்கியது. புதைந்து போன அந்த லிங்கம் வெளிப்பட்டது. அந்த இடத்தில் சிபி கோவில் கட்டினார். சூரிய லிங்கம் எனப் பெயரிட்டார்.
பிற்காலத்தில் இதை `பரிதியப்பர்' என அழைத்தனர். மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்பதால், மங்களாம்பிகை எனப்பெயர் சூட்டப்பட்டது. பரிதி என்றால் சூரியன் எனப்பொருள். சூரிய பகவான் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறார். இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம்.
மார்க்கண்டேயன் அருவ வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோயினால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். 60 வயதைத் தாண்டியவர்களுக்கு இத்தலத்தில் `சஷ்டியப்பூர்த்தி' திருமணம் செய்வதால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஆயிரங்காளியம்மன் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» நரசிங்கப்பெருமாள் கோவில்
» கொல்லாபுரியம்மன் கோவில்
» விருத்தபுரீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum