ஆயிரங்காளியம்மன் கோவில்
Page 1 of 1
ஆயிரங்காளியம்மன் கோவில்
ஸ்தல வரலாறு.....
நாகூருக்கும் - காரைக்காலுக்கும் நடுவில் உள்ள திருமலைராயன்பட்டினத்தில் ஆயிரங்காளியம்மன் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தத் திருமலைராயன் பட்டினத்துக் கடற்கரையில் ஒரு பெட்டி அலைகளோடு, அலைமோதியபடி மிதந்தது. இந்தப் பெட்டியை மீட்க மீனவர்கள் முயன்ற போது அவர்களின் கையில் சிக்காமல் பெட்டி நழுவியது.
இதே நேரம் ஊர்ப் பெரியவர் ஒருவரது கனவில், `கடலில் மிதக்கும் அன்னையை நீயே கரை சேர்ப்பாய்...' என்றொரு குரல் வரவே, அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர் கடற்கரைக்கு வந்து, கடலுக்குள் இறங்கியதும், அவருக்காகவே காத்திருந்தது போல அந்தப் பெட்டி மிதந்து வந்து அவர் கையில் சேர்ந்தது.
பெட்டியைத் திறந்து பார்த்தால் உள்ளே காளியம்மன் புன்னகையுடன் காட்சித் தந்தாள். கூடவே ஒரு ஓலைச்சுவடி... `என்னைப் பெட்டியை விட்டு வெளியே வைத்து ஆயிரம் பழங்கள், ஆயிரம் பட்சணங்கள் இவைகளுடன் தான் வணங்க வேண்டும்...' என்று ஓலையில் இருந்தது.
ஓலைச்சுவடிக் குறிப்பின்படி ஆயிரம் பொருட்களுடன் கும்பிட ஐந்தாண்டுக்கு ஒருமுறையே முடியும் என முடிவெடுத்து, அம்மனின் அருள்வாக்குச் சம்மதத்தின்படி அன்று முதல் இன்று வரை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பெரிய விழா எடுத்து அம்மனை வணங்கி வருகின்றனர்.
ஆயிரங்காளியம்மனை வணங்கவும், விழா நாட்களில் கலந்து கொள்ளவும் பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்து கூட திரள்கின்றனர். ஐந்தாண்டுக்கு ஒருமுறை என மூன்று நாட்கள் அம்மனைப் பெட்டியிலிருந்து எழுந்தருளச் செய்து, ஆயிரம் மாம்பழம், ஆயிரம் மாதுளம், ஆயிரம் ஆப்பிள் மற்றும் ஆயிரம் அதிரசம், ஆயிரம் முறுக்கு, ஆயிரம் சீடை என்று ஆயிரம் ஆயிரமாய் படையல் வைத்து அம்மனை வணங்கி அருள் பெறுகின்றனர்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சுத்தரத்தினேஸ்வரர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருவேங்கடமுடையான் கோவில்
» ஸ்ரீவனதுர்கையம்மன் கோவில்
» சுவர்ணபுரீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum