தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தெடுக்கும் அஞ்சலி!

Go down

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தெடுக்கும் அஞ்சலி! Empty உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தெடுக்கும் அஞ்சலி!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:56 pm

ஆர்யா நடித்துள்ள சேட்டை படத்தில் ஹன்சிகா, அஞ்சலி இருவரும் கதைப்படி சற்று புஷ்டியாக இருக்க வேண்டும் என்று சொன்னாராம் இயக்குனர். ஆனால் ஹன்சிகாவைப்பொறுத்தவரை எப்போதுமே அவர் கொளுகொளு பொம்மைதான். ஆனால் அஞ்சலிதான், தினமும் ஜிம்னாஸ்டிக் சென்று உடம்பை ஸ்லிம் பண்ணி பராமரித்து வந்தார். அதனால் அவரை கண்டிப்பாக உடம்பை புஷ்டியாக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம் டைரக்டர். இதனால் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடம்பில் சதை போட்டால், பின்னர் அதை குறைக்க பெரும்பாடு பட வேண்டியிருக்குமே என்று தயங்கி நின்றாராம் அஞ்சலி. ஆனால், இந்த கதைக்கு கொளுகொளுவான இரண்டு பொம்மைதான் எனக்கு தேவை என்று டைரக்டர் விடாப்பிடியாக இருந்ததால், அதையடுத்து இரண்டு வாரங்களிலேயே ஐஸ் கிரீம், பீட்சா என்று உடம்பில் சதை போடும் அயிட்டங்களை அடுக்கி பத்து கிலோ வரை உடல் எடையை அதிகப்படுத்தி விட்டாராம் அஞ்சலி.

இதையடுத்து கண்கவர் கவர்ச்சி பொம்மையாக டைரக்டர் முன்பு போய் நின்றபோது இன்ப அதிர்ச்சியடைந்தாராம். அதன்பிறகுதான் ஆர்யா-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ஹன்சிகாவைப்போன்று கிளுகிளு உடையில் நடித்துள்ள அஞ்சலி, மென்மையாக கவர்ச்சி கவிதையாக வெடித்து சிதறியிருக்கிறாராம்.

ஆனால், அடுத்தடுத்து அஞ்சலி நடிக்க வேண்டியிருந்த படங்களுக்கு கண்டிப்பாக உடம்பை குறைத்தாக வேண்டும் என்று கூறுகிறார்களாம். அதனால், இப்போது அடுத்தகட்டமாக உடம்பை பத்து கிலோ குறைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார் அஞ்சலி. ஆனால், இரண்டே வாரத்தில் ஏறிய உடம்பு, இப்போது இரண்டு மாதங்களாகியும் இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதாம். அதனால், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தெடுத்து வருகிறார் நடிகை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி!
» முகம், உடம்பை இளமையாக்கும் ஸ்ரேயா!
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
» கோடையில் உடம்பை குளிர வையுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum