தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேட்டை – அதுவல்ல இது

Go down

சேட்டை – அதுவல்ல இது Empty சேட்டை – அதுவல்ல இது

Post  ishwarya Wed Mar 27, 2013 2:49 pm

சேட்டை படத்தின் பாடல்களை பிரமோட் செய்வதில் சேட்டை டீம் அதிக ஆர்வம் காட்டுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பே ஆர்யாவுடன் அஞ்சலியும், ஹன்சிகாவும் டூயட் பாடியுள்ள இரு பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தி டெல்லி பெல்லியின் ரிமேக்தான் சேட்டை. இந்தி ஒரிஜினலில் கெட்ட வார்த்தைகளும் அடலஸ் ஒன்லி காட்சிகளும் நிரம்பியிருக்கும். அதில் அம்பது சதவீதத்தை தமிழில் எடுத்தாலே பெண்கள் திரையரங்கு பக்கம் திரும்ப மாட்டார்கள். பெண்களும், குழந்தைகளும் விரும்பாத படம் தமிழகத்தில் ஓடியதாக சரித்திரமில்லை.

இதன் காரணமாக சேட்டை குடும்பத்தோடு பார்க்கத் தகுந்தது என்பதை வலியுறுத்துவதற்காகவே இரண்டு பாடல்களை படம் வெளிவருவதற்கு முன் வெளியிடுகிறார்கள். மேலும் டெல்லி பெல்லி வேறு இது வேறு. மெயின் கதையை மட்டும்தான் எடுத்துக் கொண்டோமே தவிர காட்சிக்கு காட்சி அப்படியே தமிழில் எடுக்கவில்லை என்று கூறிவருகிறார்கள்.

ஏற்கனவே படத்தின் ட்ரெய்லரை திரையரங்கில் பார்த்து, என்ன ரசனைடா இது என்று பலரும் முகம் சுழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum