ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி ரசிகர்கள் சென்னையில் ஒட்டிய போஸ்டர்கள்
Page 1 of 1

ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். 1996-ல் இருந்தே இக்கோரிக்கை வலுத்து வருகிறது. அப்போது தி.மு.க., த.மா.கா. கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தார். ரசிகர்கள் ரஜினி படங்கள் மற்றும் ரசிகர்மன்ற கொடியுடன் சென்று அக்கூட்டணிக்கு தேர்தல் பிரசாரம் மற்றும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
2004 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வெளிப்படையாக ஆதரித்தார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் பிரச்சினை ஏற்பட்டபோது அக்கட்சிக்கு எதிராக ஒட்டளிக்கும்படியும் வற்புறுத்தினார்.
2008-ல் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கிளர்ந்தெழுந்து ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அறிக்கைகள் வெளியிட்டனர். போஸ்டர்களும் அச்சிட்டு ஒட்டினார்கள். தனிக்கட்சியும் ஆரம்பித்தார்கள். நிறைய ஊர்களில் கட்சி கொடியும் ஏற்றப்பட்டன.
அப்போது ஆந்திராவில் சிரஞ்சீவி தனிக்கட்சி துவங்கி இருந்தார். அதுபோல் ரஜினியும் கட்சி துவங்க அழுத்தம் கொடுத்தார்கள். ரஜினி ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும்விதமாக அரசியலுக்கு வரும்படி யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. அப்படி வந்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது என்று அறிக்கை வெளியிட்டார்.
தனிக்கட்சி துவங்கிய ரசிகர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. சிலர் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கோட்டையில் இருந்து ரஜினி நடந்து வருவது போன்ற படத்துடன் விட்டுக் கொடுத்தது போதும்… தலைவா உள்ளே போ என்ற வாசகத்தை அச்சிட்டு இப்போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். உள்ளே போ என்பது பாட்ஷா படத்தின் ரஜினி பேசும் வசனம் ஆகும்.
இதுபோல் ரஜினி கையில், பொறுத்திருங்கள் 2016-ல் நான் முதல்வர் ஆவேன் என்ற வாசகம் அடங்கிய பேப்பரை பிடித்திருப்பது போன்று இன்னொரு போஸ்டரையும் ஒட்டியுள்ளார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி
» சென்னையில் அமிதாப்-ரஜினி சந்திப்பு!
» சென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி
» சென்னையில் ஒரு வாரம் ரஜினி பட விழா: பழைய படங்கள் திரையிடப்படுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum