இந்தியாவில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்: அமிதாப் உள்பட 61 சினிமா பிரபலங்களைச் சந்திக்கிறார்!
Page 1 of 1

மும்பை: இந்தியா வந்துள்ள பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை இந்திய திரையுலகைச் சேர்ந்த 61 பிரபலங்கள் இன்று சந்தித்துப் பேசுகின்றனர். இவர்களில் பிரபல நடிகர் அமிதாப், தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், பிரபு தேவா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்கு புதிதாக அறிமுகம் தேவையில்லை. பாக்ஸ் ஆபீஸ் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை ஒரு சேர வென்றவர். சமீபத்தில் இவர் இயக்கிய லிங்கன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில், அமெரிக்க ஜனாதிபதி லிங்கனாக நடித்ததற்காக டேனியல் டே லீவிஸ் சிறந்த நடிகர் விருது பெற்றார். இந்த படம் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.
எனவே இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ஸ்பீல்பெர்க் இந்தியாவிற்கு இன்று வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கொலாபாவில் உள்ள தாஜ் மகால் ஓட்டலில் தங்கியுள்ளனர். அமெரிக்க அடிமைத்தனத்தை ஒழிக்கும் 13வது சட்டதிருத்தத்திற்கு ஒப்புதல் வழங்க கோரி நடைபெற்ற உள்நாட்டு போர் மற்றும் அதில் ஆபிரகாம் லிங்கனின் போராட்டம் ஆகியவைதான் இந்தப் படத்தின் மையக்கரு.
நமது நாட்டுக்கு விருந்தினராக வந்துள்ள இயக்குனர் ஸ்பீல்பெர்க் நாளை திரை பிரபலங்களை சந்தித்து உரையாடுகிறார். அவர்களிடம் தனது திரையுலக அனுபவங்களையும், படத்தயாரிப்பு குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அமிதாப் உள்பட 61 திரை பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இயக்குனர்கள் பிரியதர்சன், ராஜ்குமார் ஹிரானி, அனுராக் காஷ்யப், பர்ஹான் அக்தர், ஜோயா அக்தர், அபிஷேக் கபூர், ஹபீப் பைசல், ராம் கோபால் வர்மா, சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் பாரா கான் ஆகியோரும் உள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க்
» ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீபன் ஸ்பீல் பெர்க்குடன் கமலஹாசன் சந்திப்பு
» தீபாவளி ஸ்பெஷல்: ஷங்கர் இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – விஜய்
» ஸ்ரீதேவியை சந்திக்கிறார் தமன்னா
» ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜய்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum