1-ந்தேதி ஸ்டிரைக்: இந்தியா முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது
Page 1 of 1

நாமக்கல், மார்ச் 27-
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வருகிற 1-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது. மத்திய அரசு வருகிற 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட உள்ள மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். டீசல் விலை உயர்வு தொடர்பாக அந்தந்த ஆயில் நிறுவனங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும்.
நாடு முழுவதும் சீரான சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு அளித்து உள்ளது. இதற்கிடையே நேற்று லாரி உரிமையாளர்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் மீண்டும் வருகிற 30-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. அப்போதும் கோரிக்கையை ஏற்க மறுத்தால் திட்டமிட்டபடி 1-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர். இது பற்றி அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது:-
மத்திய அரசுக்கும் எங்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாததால் தோல்வியில் முடிந்து உள்ளது. இருப்பினும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் எங்கள் கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தனர். எங்கள் கோரிக்கை 3 துறைகளின் கீழ் வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மந்திரிகளிடம் பேசி நல்ல பதில் சொல்வதாக கூறினர்.
வருகிற 30-ந்தேதி மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைத்து உள்ளனர். நாங்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் அதில் எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதும் ஏற்க மறுத்தால் திட்டமிட்டபடி வருகிற 1-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும். இந்த போராட்டத்தால் நாடுமுழுவதும் எந்த பகுதியிலும் லாரிகள் இயங்காது. சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும். அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. அரசு தான் பொறுப்பு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:-
எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வில்லை என்றால் வருகிற 1-ந்தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். இந்தியா முழுவதும் 75 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. இவை ஒரு நாளைக்கு ஓடா விட்டால் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.
இதனால் லாரி தொழிலில் ஈடுபட்டு உள்ள சுமார் 2 கோடியே 25 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதுபோல் காய்கறி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஒரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் காய்கறி விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு லாரி உரிமையாளர் சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழகத்தில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது: உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
» வட இந்தியா முழுவதும் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம் இன்று ரிலீசானது

» தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்
» ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum