வட இந்தியா முழுவதும் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம் இன்று ரிலீசானது
Page 1 of 1

கமலின் விஸ்வரூபம் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரானது. தமிழ் பதிப்பு கடந்த 25-ந்தேதி தமிழகம், புதுவை தவிர மற்ற மாநிலங்களில் வெளியானது. இந்தியில் விஸ்வரூபம் படம் இன்று வெளியிடப்பட்டது.
மும்பை, டெல்லி, கொல்கத்தா, உள்ளிட்ட நகரங்களிலும் மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பஞ்சாப், அரியானா என அனைத்து மாநிலங்களிலும் வெளியானது.
படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. மும்பை, நகரத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. டெல்லியில் 19 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டு உள்ளது. நொய்டாவில் உள்ள ஒரே தியேட்டரில் மட்டும் இன்று தொடர்ச்சியாக 12 காட்சிகள் திரையிடுகின்றனர்.
வட இந்தியா முழுவதும் 800 தியேட்டர்களில் இந்தி விஸ்வரூபம் திரையிடப்பட்டது. இப்படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் உத்தரபிரதேசத்தில் தடை விதிக்கப்படும் என்று அம்மாநிலத்தின் ஆளும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் ராம் ஆஸ்ரே தெரிவித்து உள்ளார். அதிகாரிகளுக்கு படம் திரையிட்டு காட்டப்படும் என்றும் சர்ச்சை காட்சிகள் இருந்தால் தடை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தி நடிகர், நடிகைகளுக்கு மும்பையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் கமலும் கலந்து கொண்டார். படம் பார்த்த நடிகர், நடிகைகள் கமலை பாராட்டினர்.
சல்மான்கான் கூறும்போது விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். இப்படத்தில் ஆட்சேனனைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. விஸ்வரூபம் படத்தை திரையிட கோரி தியேட்டர்கள் முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்யும்படி ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன் என்றார்.
தெலுங்கு இயக்குனர் தேஜா கூறும்போது என் குடும்பத்தோடு விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஹாலிவுட் தரத்தில் படம் இருந்தது. கமலை நினைத்து இந்தியாவே பெருமை படலாம். சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வட இந்தியா முழுவதும் 800 தியேட்டர்களில் விஸ்வரூபம் இன்று ரிலீசானது
» நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்...! விஸ்வரூபம் சினிமாவிற்கு ஏற்பட்டுள்ள கதி!
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» விஸ்வரூபம் படம் இன்று வெளியானது: தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம்
» ‘விஸ்வரூபம்’ வெளியாகும் தியேட்டர்களில் இன்று 'கடல்', 'டேவிட்' படங்கள் ரிலீஸ்: கமலுக்கு மேலும் ஒரு சிக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum