தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சை மிளகாய் தொக்கு

Go down

பச்சை மிளகாய் தொக்கு Empty பச்சை மிளகாய் தொக்கு

Post  ishwarya Wed Mar 27, 2013 11:40 am

தேவையானவை: பச்சை மிளகாய் (அடர் பச்சை நிறத்தில்) – கால் கிலோ, புளி – பெரிய எலுமிச்சம்பழ அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் (குவித்து அளந்தது), மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – கால் கப்.

தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன், எண்ணெய் – அரை கப்.
வறுத்துப் பொடிக்க: வெந்தயம் – அரை டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறு இலந்தைப்பழ அளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.



செய்முறை:

பச்சை மிளகாயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைத்து, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். அதிலிருக்கும் மீதி எண்ணெயுடன் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய மிளகாய்த் துண்டுகளைப் போட்டு, நன்கு வதக்கி எடுங்கள்.

பின்னர், வதக்கிய பொருள்களுடன் புளி, உப்பு, மஞ்சள்தூள், பொட்டுக் கடலை சேர்த்துத் தண்ணீரில்லாமல் அரைத்தெடுங்கள் (இந்தக் கலவையை ஆட்டுரலில் அரைப்பது சுலபம். மிக்ஸியில் அரைப்பதற்குச் சற்று சிரமமாகத் தான் இருக்கும். கிளறிக் கிளறிவிட்டுத்தான் அரைக்கவேண்டும்).

மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum