இளம் நடிகர் முத்துராஜா மரணம்
Page 1 of 1
இளம் நடிகர் முத்துராஜா மரணம்
சென்னை, பிப்.22: விபத்துக்குள்ளான நகைச்சுவை நடிகர் முத்துராஜா (34) மதுரையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
கம்பத்தைச் சேர்ந்த முத்துராஜா, தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கம்பத்தில் அவரது வீட்டின் மாடியிலுள்ள தண்ணீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது தவறி விழுந்துவிட்டார். தலையில் பலத்தக் காயமடைந்த அவரை உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு கோமா நிலையில் இருந்த அவர் நினைவு திரும்பாமலேயே செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். முத்துராஜாவுக்கு கடந்த ஜனவரி 30-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. அவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார்.
சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற "வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' பாடலில் கானா உலகநாதனுக்கு மைக் பிடித்தவாறே நடித்த பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. வாளமீனு முத்துராஜா என்ற அடைமொழியுடன் நடித்து வந்தார்.
கிழக்கு கடற்கரை சாலை, வெளுத்துக்கட்டு, வேங்கை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை உள்பட இதுவரை 55 படங்களில் நடித்துள்ளார். இப்போது 22 படங்களில் நடித்து வந்தார்.
மறைந்த முத்துராஜா, இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தில் பணியாளராகவும் நடிகர் கவுண்டமணியிடம் சில ஆண்டுகள் உதவியாளராகவும் இருந்தவர்.
அவருடைய இறுதிச் சடங்கு கம்பம் கே.கே.பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. இறுதிச் சடங்கில் நடிகர் சங்க நிர்வாகிகளும், திரைப்பட நண்பர்களும் கலந்துகொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிரட்டும் இளம் நடிகர்
» ஒரு படத்துக்கு 17 கோடிகள் - இளம் நடிகர் சாதனை.
» மங்காத்தா வில்லன் நடிகர் மரணம்
» நடிகர் ஜாய் திடீர் மரணம்
» நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் மனைவி மரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum