தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!

Go down

மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை! Empty மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!

Post  ishwarya Tue Mar 26, 2013 5:43 pm



தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பாவனா. அதையடுத்து தீபாவளி, ஆர்யா, அசல், ஜெயம் கொண்டான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளைக்கும் காதல் என்று தகவல்கள் வந்துள்ளன. ராஜீவ்பிள்ளை கேரளாவில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது, எங்களுக்குள் காதல் இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை, அவர் எனக்கு நண்பர்தான் என்று கூறியுள்ளார். அதே போல் ராஜீவ் பிள்ளையும் பாவனாவை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum