கோவில்பாளையத்தில் டாஸ்மாக்
Page 1 of 1
கோவில்பாளையத்தில் டாஸ்மாக்
கோவில்பாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சத்தி சாலையில் 3 மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை
கோவையை அடுத்த கோவில்பாளையம் நெடுஞ்சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்கள். இதைதொடர்ந்து நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றி 2 கிலோமீட்டருக்கு உட்புறம் உள்ள பகுதியில் அமைக்க கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் டாஸ்மாக் கடையை மாற்றாமல், அதே இடத்தில் கடையின் கதவை மட்டும் மாற்றி உள்ளனர்.
அகற்றக்கோரி சாலை மறியல்
இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஆத்திரம் அடைந்து நேற்று காலை 9 மணிக்கு சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுகொண்டிருந்த வால்பாறை டி.எஸ்.பி. சக்திவேல், கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரு ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், அரசு அதிகாரிகள் வந்து எங்களிடம் பேசவேண்டும் என்று கூறினார்கள். இதைதொடர்ந்து அன்னூர் தாசில்தார் சம்பத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தை ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து கடையை மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் இதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் தாசில்தார் சம்பத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டி.எஸ்.பி. சக்திவேல் குறிக்கிட்டு மீண்டும் சமாதானபேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சத்தி சாலை சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டாஸ்மாக் கடையில் கதாநாயகன் தேடல்
» டாஸ்மாக் ஊழியரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
» நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அகற்ற 5 மாதம் ஆகும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum