எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை நாளை
Page 1 of 1
எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சை நாளை
கோவையில் நாளை தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை 108 மையங்களில் 39 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். பள்ளிகளில் உள்ள ஜெராக்ஸ் எந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 12–ந் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கோவை வருவாய் மாவட்டம் உள்ளடங்கிய கோவை கல்வி மாவட்டத்தில் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை 406 பள்ளிகளில் இருந்து 19,028 மாணவர்களும், 19,214 மாணவிகளும், 853 பேர் தனித் தேர்வர்களாகவும் என மொத்தம் 39,095 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
மேலும் கோவை கல்வி மாவட்டத்தில் 10–ம் வகுப்பு தேர்வை பள்ளிகள் மூலம் எழுதும் மாணவர்களின் வசதிக்காக 97 மையங்களும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக 11 மையங்களும் என மொத்தம் 108 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள 11 மையங்களில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு உள்ளனர்.
பறக்கும் படை
தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை கண்டுபிடிக்க 150 ஆசிரியர்களை கொண்ட 25 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் சென்று திடீர் சோதனை நடத்துவார்கள்.
இதைத் தவிர தேர்வுகளை கண்காணிக்க 108 முதன்மை கண்காணிப்பாளர்கள், 118 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 108 துறை அலுவலர்கள், 108 கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதைத் தவிர தேர்வு மையங்களுக்கு 3 ஆயிரம் ஆசிரியர்கள் அறைக்கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஜெராக்ஸ் எந்திரங்கள்
தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெராக்ஸ் எந்திரம் மூலம் வினாத்தாள்களை நகல் எடுத்து வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ள பள்ளிகளில் ஜெராக்ஸ் எந்திரம், கம்ப்யூட்டர் அறை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த அறைகளை பூட்டி சீல் வைக்குமாறு தேர்வு மையங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
தடையில்லா மின்சாரம்
மேலும் ஒரு சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு மையம் வேறு இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த மாணவர்கள் தேர்வு மையத்துக்கு செல்வதற்கு வசதியாக பள்ளி செல்வதற்காக பயன்படுத்தி வரும் இலவச பஸ் பாசை தேர்வு மையத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது அந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களிலும் இதை உபயோகம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தேர்வுகள் நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்ச்சியாக 4 மணி நேரம் மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் சில பள்ளிகளில் முன்னேற்பாடாக ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாளை கருட ஜெயந்தி
» நாளை நமதே
» நாளை சபரிமலை நடை திறப்பு
» நாளை கருட ஜெயந்தி
» நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்
» நாளை நமதே
» நாளை சபரிமலை நடை திறப்பு
» நாளை கருட ஜெயந்தி
» நாளை திரையுலகினர் உண்ணாவிரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum