தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை கருட ஜெயந்தி

Go down

நாளை கருட ஜெயந்தி Empty நாளை கருட ஜெயந்தி

Post  gandhimathi Thu Jan 17, 2013 2:50 pm



நாளை (வியாழக்கிழமை) கருட ஜெயந்தி. இந்த நல்ல நாளில் கருடாழ்வாரை வழிபட்டால் பல்வேறு புண்ணியங்கள் கிடைக்கும். தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. ஆவணி மாத சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்.

இதுவே கருட பஞ்சமி எனப்படுகிறது. நட்சத்திரங் களில் சுவாதி நட்சசத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சூரியன் துலா ராசியில் சஞ்சாரம் செய்யும்போது சுவாதி நட்சத்திர நாளில்தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகும். நரசிம்மர் அவதாரம் செய்ததும் சுவாதி நட்சத்திரத்தில் தான். கருடபகவானின் அம்சமாக ஆழ்வார்களில் பெரியாழ்வார் அவதாரமும் சுவாதி நட்சத்திரத்தில் தான்.

அத்தகைய சிறப்புடைய சுவாதி நட்சத்திர நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. எனவே, நாளை கருடாழ்வாரை வழிபடுவது மிகவும் பலன் தரக்கூடியது. அதற்கு முன் கருடாழ்வார் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்....

கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இவருக்கு பெரிய திருவடி என்ற பெயரும் உண்டு. பெயர்க் காரணம்..

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலததை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன.

பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டிய தாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார காட்சியை தனக்கும் காட்டி அருள வேண்டினார்.

பெருமாள் கருடனை அஹோபிலம் சென்று தவமியற்றும்படி கூறி தான் அங்கேயே நரசிம்ம அவதார காட்சி தருவதாகவும் உறுதியளித்தார். அவ்வாறே பல இன்னல்களுக்கிடையே கருடன் தவமியற்றினார். கருடனுக்கு உறுதியளித்த படி பெருமாள் மலைக்குகையில் உக்ர நரசிம்மராய் காட்சியளித்தார்.

மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.

கருட வாகனம்..........

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.

தனது உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார். பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.

கருட சேவை............

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், "பிரம்மோற்சவம்' என்பர். பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருடவாகன சேவை நடைபெறுகிறது.

கருடாழ்வார் அவதரித்த தினம் பெருமாள் கோவில்களில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம்.பெருமாளால் ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

நல்ல சகுனம்...........

ஆகாயத்தில் கருடனைப்பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம். பத்மபுராணத்தில் உள்ள நான்கு பாடல்கள் கருடன் அருளால் மனிதனுக்கு கிடைக்கும் என அபூர்வ சக்திகளைப் பற்றி கூறுகின்றன. பிறரை வசியம் செய்தல், மயங்க வைத்தல், பகைவர்களை அடக்குதல், உணர்வை வற்றச் செய்தல், வானத்தில் உலாவுதல், காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றி புகுதல், இந்திராஜாலம் காட்டுதல், படிப்பில் தேர்ச்சி, நல்ல நினைவாற்றல், வாதத்திலும் நேரிலும் வெற்றி பெறுதல் ஆகியவை சித்தியாகும்.

கருடனின் சிறப்பு............

ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்போதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார். இவர் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

கருடனுக்கு பிரகஸ்பதி குரு. ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் பெருமாளின் சன்னதிக்கு எதிராக கருடன் சன்னதியும், துவஜ ஸ்தம்பம் என்ற கருடக்கொடி மரமும் அமைந்தள்ளன. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும். மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

வழிபாட்டு பலன்கள்.........

கீழ்க்கண்ட தினங்களில் கருடனைத் தரிசித்தால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் - குடும்ப நலம். செவ்வாய் - தைரியம் ஏற்படும். புதன் - எதிரிகள் மறைவர். வியாழன் - நீண்ட ஆயுள் வெள்ளி - அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

சனி - முக்தி கிடைக்கும். கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

கருட சன்னதிகள்...........

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை.

இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது.

சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார்.

இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum