கொழும்புவில் நவம்பர் மாதம்
Page 1 of 1
கொழும்புவில் நவம்பர் மாதம்
சென்னை
கொழும்புவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:–
இலங்கை தமிழர் பிரச்சினை
இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின்போது சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற பிரச்சினையால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வேதனை தொடர்பாக தங்களுக்கு 18–ந் தேதி கடிதம் எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன். இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை கோரவும், அந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரவும் பரவலான ஆதரவு இருக்கிறது. அதனால்தான் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை அப்படியே ஆதரிக்காமல், உரிய திருத்தங்களை செய்து அதற்கு வலு சேர்க்க வேண்டும் என்று நான் யோசனை கூறியிருந்தேன்.
இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால், அதற்கு மாறாக அமெரிக்க கொண்டு வந்த நீர்த்துப்போன, பலவீனமான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததுடன் இனப்படுகொலையை கண்டிக்கும் வகையில், போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை கோரும் வண்ணம் எவ்விதமான திருத்தங்களையும் இந்தியா செய்யவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாகவும், தமிழக மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைப்பதாகவும் அமைந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் மாநாடு இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை கொழும்புவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவது, இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள இலங்கையை ஆதரிப்பது போல் ஆகிவிடும்.
மேலும் ஒரு வாய்ப்பு
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு நியாயமான, சட்டப்பூர்வ மனித உரிமைகளையும், சமத்துவத்தையும், ஜனநாயக விடுதலையையும் தொடர்ந்து மறுத்து வருவது காமன்வெல்த் நாடுகளின் மதிப்பீடுகளுக்கு எதிரானது. ஜனநாயகமும், மனிதஉரிமைகளும் மிகுந்த காமன்வெல்த் அமைப்பின் முதன்மை நோக்கத்தை மீறுவதையே இது காட்டுகிறது. மேற்கண்ட மதிப்பீடுகளை மீறியதற்காக காமன்வெல்த் அமைப்பில் இருந்து பல நாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளன.இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் அந்த நாடு மீது இந்தியா அழுத்தம் கொடுப்பதற்கு இந்த மாநாடு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும். இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய கொடுமைகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், இலங்கை தமிழர்கள் சமஉரிமைகளுடனும், தன்மானத்தோடும் வாழ வழிவகை செய்வதற்கும் இந்த மாநாடு நல்ல வாய்ப்பாகும்.
தமிழக மக்களின் உணர்வுகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இந்த விஷயத்தில், இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும்.இலங்கை அரசின் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்காக இந்த மாநாட்டை புறக்கணிப்பது என்று கனடா நாடு ஏற்கனவே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் இங்கிலாந்து நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான மக்களவை கமிட்டியும் அந்த நாட்டு பிரதமரை கொழும்புவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
மாற்று இடத்தில் மாநாடு
இரண்டு ஜி–8 நாடுகள் உள்பட உலகின் முக்கியமான நாடுகள் காமன்வெல்த் மாநாட்டை உரிய முறையில் தங்கள் அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்தி, இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை காட்டுவதற்கு திட்டமிட்டுள்ளன. உலகில் எந்த நாட்டிலும் குறிப்பாக அண்டை நாட்டில் ஜனநாயக மதிப்பீடுகளும், மனித உரிமைகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மிகப்பெரிய பலம் வாய்ந்த நாடாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்டு வரும் இந்திய நாட்டின் கடமை ஆகும்.இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைக்கு இலங்கையை ஏற்கச் செய்யும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்கும் இடத்தில் தெற்கு ஆசியாவில் முன்னணி நாடான இந்தியா உள்ளது. இந்த மாநாட்டை மாற்று இடத்தில் நடத்துவது பற்றி முடிவு செய்ய இன்னமும் கால அவகாசம் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த மாநாட்டை வேறு ஒரு நாட்டில் நடத்த வலியுறுத்த வேண்டும். இந்தியா இத்தகைய ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மற்ற நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
இந்தியா பங்கேற்கக்கூடாது
கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் அது இலங்கை அரசுக்கு தைரியம் கொடுப்பதுடன் மட்டுமல்லாமல், பரபரப்பான இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுக்கும், பொதுக்கருத்திற்கும் மேலும் தூபம் போட்டது போலாகிவிடும். எனவே, கொழும்புவில் வரும் நவம்பர் மாதம் 15–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் தங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் பெரிய நாடு என்ற வகையில் இந்த விஷயத்தில் இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும், இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு ஆதரவாக ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் நான் நம்புகிறேன். இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாததன் மூலம் இலங்கை தமிழர்களுக்கு நியாயம் வழங்குமாறு இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுக்க முடியும்.
கோபத்தை தணிக்க இயலும்
இதன்மூலம் தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் நியாயமான உணர்வுகளுக்கும், ஒற்றுமைக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும். இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபத்தையும் தணிக்க இயலும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்
» நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
» நமது பெருமை-கொழும்புவில் பேசியது
» கொழும்புவில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா?: பாடகர் ஹரிஹரனுக்கு எதிர்ப்பு
» நவம்பர் 30 நயன்தாரா படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum