நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
Page 1 of 1
நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
பண்டிகைகளுக்காக பிரசாதங்களா, பிரசாதங்களுக்காக பண்டிகைகளா? நெய்க்கு தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா? (அந்த காலத்தில் பிரபல விருந்துகளில் வாழையிலையால் செய்யப்பட்ட தொன்னையில் நெய் ஊற்றி உபசரிப்பார்கள். வாழையிலை தொன்னை, தனியே இருந்தால் பறந்து விடும்; நெய்யை, சாப்பிடும் இலையில் ஊற்றினால் அது ஓடிவிடும். இதற்காகவே வாழையிலை தொன்னையில் நெய் ஊற்றினார்கள். பறந்துவிடுவதும் ஓடிவிடுவதும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக அமைந்து பறக்காமலும், ஓடாமலும் இருக்கும்!) ஆனால் நம் பண்டிகைகளைப் பொறுத்தவரை, அது ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் என்றாலும் சம்பிரதாயமான சில நிவேதன உணவுப் பொருட்கள் இடம் பெறும். ஒரே மாதிரி கொழுக்கட்டை, ஒரே மாதிரி வடை, முறுக்கு, சீடை, அல்வா, மைசூர்பாகு, பாயசம் என்று அலுத்துப் போகும்போது வித்தியாசமாக நிவேதன உணவுப் பொருட்களைத் தயாரிக்க (சம்பிரதாயத்தையும் மீறி) நாம் தயாரானோம். இப்படி மாறுபட்ட பிரசாதத்தால் இறைவனும் சந்தோஷப்படுவார் என்றும் நம்புகிறோம். அந்த வகையில், இதோ, தீபாவளி சமயத்தில் சில புதுமை பிரசாதங்கள்...
அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
என்னென்ன தேவை?
அத்திப்பழம் - 1 கப், வாழைப்பழம் - 1, பால் - 1 கப், நெய் - 1 கப், சர்க்கரை - 1 கப்.
எப்படிச் செய்வது?
அத்திப்பழத்தை பால் சேர்த்து வேக விடவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்திப்பழக் கூழுடன் சேர்த்து மீண்டும் மசிக்கவும். கடாயை சூடாக்கி, சர்க்கரை சேர்த்து இளம் பாகு காய்ச்சவும். அதில் மசித்த பழக்கலவை சேர்த்து, நெய் விட்டு நன்கு கிளறவும். கலவை நன்கு சுருண்டு வரும் போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, மெலிதான, சதுரத் துண்டுகள் போடவும். காய்ந்த அத்திப்பழம் என்றால் அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்துப் பின் மசிக்கவும். அத்திப்பழம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
» அத்திப்பழ ஜூஸ்
» அத்திப்பழ ஜூஸ்
» சமையல்:அத்திப்பழ காரப்புட்டு
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
» அத்திப்பழ ஜூஸ்
» அத்திப்பழ ஜூஸ்
» சமையல்:அத்திப்பழ காரப்புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum