தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்
Page 1 of 1
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக டை ஆக்ஸைடு திறந்துவிடப்பட்டதில் கடந்த சனிக்கிழமை பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அந்த ஆலையை மூடக்கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.அவர்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடந்து சென்றனர்.
வைகோ கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை கலெக்டர் அலுவலகம் முன்பு செல்லவிடாமல் தடுத்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்தனர்.இதனால் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல், மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், கலை இலக்கிய அணி செயலாளர் மகராஜன், பாத்திமாபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன், ஷாஜகான் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீனவர்கள் முற்றுகை
இதே போன்று மீனவர் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி பீச் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேவியர்வாஸ் தலைமையில் மீனவர்கள் அந்த ஆலை முன்பு குவிந்தனர். ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டம் நடத்திய 17 பெண்கள் உள்பட 104 பேரை கைது செய்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்டெர்லைட் ஆலையில் இறந்த
» தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு முடிந்தது
» ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்:தூத்துக்குடியில் வைகோ பேட்டி
» அனைத்து கட்சியினரும் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: வைகோ அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum