தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்

Go down

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் Empty தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்

Post  meenu Tue Mar 26, 2013 5:20 pm

சென்னை

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 30–ந் தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறினார்.இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அதிர்ச்சி

இன்றைய தினம் (நேற்று) சட்டமன்றத்தில் தே.மு.தி.க. கட்சியை சேர்ந்த சட்டமன்ற கொறடா வி.சி.சந்திரகுமார் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ப.பார்த்தசாரதி, து.முருகேசன், கு.நல்லதம்பி, எஸ்.செந்தில்குமார், ஆர்.அருள்செல்வன் ஆகிய 6 பேரை ஒரு வருட காலத்திற்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கம் செய்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்த விதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெறக்கூடாது என்று சட்டமன்றப்பேரவை அறிவித்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.சட்டமன்றத்தில் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நடைபெறுவதும், சில சமயங்களில் கைகலப்பு ஏற்படுவதும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் இதர ஜனநாயக அமைப்புகளிலும், உலக நாடுகளின் பல்வேறு பாராளுமன்றங்களிலும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இவற்றை அத்தகைய ஜனநாயக அமைப்புகள் உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறியும் அல்லது மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு தந்தோ அல்லது ஓரிரு நாட்கள் அதற்கு மேலும் அதிகபட்சமாக அந்த கூட்டத்தொடர் முடியும் வரையில் தற்காலிகமாக நீக்கி வைப்பதுதான் வழக்கம். ஆனால் இவற்றிற்கு நேர்மாறாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஓராண்டுக்கு என்று சட்டமன்ற உறுப்பினர்களை தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பது இதுவரையில் வரலாற்றில் காணப்படாத ஓர் அபூர்வ நிகழ்வாகும்.

அன்றைய தினம் துணை கேள்வி கேட்பதற்கு என்று எழுந்த சட்டமன்ற உறுப்பினர் நீண்டதொரு உரையாற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, வம்புக்கு இழுத்தார் என்பது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும். நடந்த முழு சம்பவங்களையும் நேர்மையாக விசாரித்து இருந்தால் இந்த சம்பவத்தில் இரு தரப்பிலும் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தே.மு.தி.க. தரப்பில் மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது எப்படி முறையாகும்?.

நீதிக்கு புறம்பானது

மேலும் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து விசாரித்து இருக்கவேண்டும். இதுதான் இயற்கை நீதி. ஆனால் இன்று நடவடிக்கைகளுக்கு உள்ளாகிய தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எவரையும் உரிமைக்குழு நேரில் விசாரிக்காதது மட்டுமல்ல, இன்றைய தினம் சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் வந்தபோது அவர்களுக்கு பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை. நீதி வழங்கினால் மட்டும் போதாது, நீதி வழங்கியதாக தெரிய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் மன்றமும் ஏற்றுக்கொள்ளும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேரவைத்தலைவர் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களை ஓராண்டு வரை தற்காலிகமாக விலக்கி வைத்திருப்பது நீதிக்கு புறம்பானது மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும். அவர்களை தேர்ந்தெடுத்த அந்த தொகுதி மக்கள் ஓராண்டு காலத்திற்கு தங்கள் பிரதிநிதிகளை இழக்க செய்வது எவ்வாறு முறையாகும்?.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

மேலும் வழங்கப்படும் எத்தகைய தண்டனையும், செய்யப்படும் குற்றத்தின் அளவை பொறுத்து அமைய வேண்டும். ஓராண்டு காலம் என்பது அளவுக்கு மீறிய தண்டனையாகும். மேலும் நடவடிக்கைக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு வந்தவர்கள் ஆவார்கள். இப்பொழுது மேற்கொண்டுள்ள நடவடிக்கை, வேண்டுமென்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சி எடுத்த நடவடிக்கையாகவே கருதுகிறேன்.ஜனநாயக உணர்வின் அடிப்படையில் இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து தே.மு.தி.க.வோடு வெளிநடப்பு செய்த தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் ஆகிய கட்சியினர்க்கு எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கண்டன பொதுக்கூட்டம்

இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் தே.மு.தி.க. சார்பில் வரும் 30–3–2013 சனிக்கிழமை அன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்
» ஓராண்டுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், மேல்–சபை தேர்தலில் ஓட்டுப்போட முடியுமா? தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது
» எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
» சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு திடீர் கைது
» 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து சென்னையில் இன்று மாலை விஜயகாந்த் பேசுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum