சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு திடீர் கைது
Page 1 of 1

விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று பகலில் கைது செய்யப்பட்டார். நேற்று மாலை 6.30 மணி அளவில் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவும் திடீரென்று கைதானார்.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி 8-வது மாடியில் உள்ள டி பிளாக்கில், அறை எண் 8 இ-ல் காடுவெட்டி குரு தங்கி இருந்தார். மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் 2 போலீஸ் வேன்களில் எம்.எல்.ஏ. விடுதிக்கு வந்தனர். அறையில் இருந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏ.வை கைது செய்தனர். உடனடியாக அவரை போலீஸ் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செங்கல்பட்டு கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வீட்டில் அவரது முன்னிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு, காஞ்சீபுரம் மாவட்டம், தாழம்பூர் போலீசார் காடுவெட்டி குரு மீது, பொதுக்கூட்டத்தில் சாதி வெறியை தூண்டும் வகையில் பேசியதாக ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டு அடிப்படையில் காடுவெட்டி குரு இப்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே போல முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகமும் மறைமலைநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்டதாக பா.ம.க.வை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்று நேற்று இரவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போலி பாஸ்போர்ட்: சென்னை விமான நிலையத்தில் 6 பேர் கைது
» தீபிகா, ரன்வீர் கபூர் துபாய் விடுதியில் குதியாட்டம்!
» தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள்
» கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படம் பார்த்தனர்: விசாரணையில் அம்பலம்
» குருகுரு குரு குரு குரு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum