தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு

Go down

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு Empty இலங்கையில் காமன்வெல்த் மாநாடு

Post  meenu Tue Mar 26, 2013 5:14 pm

பதிவு செய்த நாள் : Mar 25 | 05:40 pm


சென்னை

உலகத் தமிழர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. செயற்குழு கூட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்ட நிலையில், தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

300 செயற்குழு உறுப்பினர்கள்

கூட்டத்தில், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன், திருச்சி சிவா, வசந்தி ஸ்டான்லி, ஹெலன் டேவிட்சன், மகளிரணி புரவலர் இந்திரகுமாரி, நடிகை குஷ்பூ, முன்னாள் மத்திய இணை மந்திரி ராதிகாசெல்வி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, பெரியகருப்பன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், பட்டிமன்ற பேச்சாளர் ஐ.லியோனி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட சுமார் 300 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதே நேரத்தில், மு.க.ஸ்டாலினை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பிரச்சினையில் சிக்கிய நடிகை குஷ்பூ சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டத்தில் பங்கேற்றதுடன், முதல் வரிசையிலும் அமர்ந்திருந்தார்.

காலை 10.20 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் காலை 11.40 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தி.மு.க. நிர்வாகிகள் 41 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

இந்தியா முன்னெடுக்க வேண்டும்

* மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சினையில் கவலை கொள்ளாமல், இலங்கை அரசை நட்பு நாடு என்று சொல்லிக்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது. இது சிங்கள பேரினவாத அரசுக்கு ஊக்கமளிப்பதாகவும், தமிழினத்திற்குப் பெரும் ஏமாற்றம் தருவதாகவும் அமைந்துவிட்டது.

எனவே, மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையில் இருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்தும், இனப்படுகொலை குறித்தும் நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்துவது குறித்தும், ஈழத் தமிழர்கள் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்தும், இந்தியாவே தகுந்த தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்து சென்று நிறைவேற்ற வேண்டுமென்றும் இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.



மாணவர்கள் போராட்டத்திற்கு பாராட்டு

* ஈழத் தமிழர் நலன் காக்க அடுக்கடுக்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்ட தலைவர் கருணாநிதிக்கும், டெசோ அமைப்பின் உறுப்பினர்களான பொதுச் செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு இச்செயற்குழு நன்றி தெரிவித்து பாராட்டுகிறது.

* ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர தன்னெழுச்சியாக மாணவர் சமூகமும் கிளர்ந்தெழுந்துள்ளதால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றதொரு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை மேலும் வளர்ந்துள்ளது. மாணவர்களின் உணர்வுபூர்வமான அமைதிவழிப் போராட்டத்திற்குத் தி.மு.க. தன் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாடு

* அண்மைக்காலமாக தமிழகக் கடல் எல்லைக்குள்ளேயே நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற அராஜகமான நடவடிக்கைகளில் சிங்கள மீனவர்களும், சிங்களக் கடற் படையினரும் தீவிரம் காட்டி வருகின்றார்கள்.

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்குரிய வலிமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

* 2013–ம் ஆண்டு நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலையை நடத்தி தமிழ் ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் அம்மாநாடு நடப்பது எவ்விதத்திலும் ஏற்கக்கூடியது அல்ல. எனவே, அந்த மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை தி.மு.க. செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

நம் வேண்டுகோளையும் மீறி, மாநாடு இலங்கையில் நடத்தப்படுமானால், உலகத் தமிழர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளாமல் அதனை புறக்கணிக்க வேண்டும்.

நதிநீர் இணைப்பு திட்டம்

* ஜனநாயக நெறிகளுக்கு புறம்பாக நடைபெறும் இந்தக் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தி.மு.க. பங்கெடுத்துக் கொள்ளாது என்று செய்யப்பட்ட அறிவிப்பினை இச்செயற்குழு வரவேற்கிறது.

* தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை மேலும் தாமதிக்காமல் அறிவித்து, முழு நிவாரணமும் அவர்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

* மத்திய அரசு இந்திய நதிகளை தேசிய மயமாக்குவது குறித்தும், நதிகளை இணைப்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் உள்ள பரிந்துரைகளின்படி மத்திய நீர்வளத்துறை மந்திரி தலைமையில் உடனடியாக குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, நதிநீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமென்று இந்த கூட்டம் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

சேதுகால்வாய் திட்டம்

* கரும்பு விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தற்கால நிலவரத்துக்கு ஏற்ப கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. தவறுமானால் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி சார்பாக போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

* இந்திய எரிவாயுக்கழகம் பொருத்தும் பைப் லைன் பணிகளை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயல்படுத்துவதைப் போல் தமிழக விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இப்பணிகளை தொடர இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

* மதவாத சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, தாமதமாகி வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum