ஹிந்தி துப்பாக்கியில் அக்சய்குமார்
Page 1 of 1
ஹிந்தி துப்பாக்கியில் அக்சய்குமார்
பொதுவாக ஒரு படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் அதன் ரீமேக் பற்றி பேசப்படும். ஆனால், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் துப்பாக்கிப் படம் வெளியாவதற்கு முன்பே, ஹிந்தி ரீமேக் பற்றி பேச ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.
இந்த ஆண்டின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக துப்பாக்கி இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.
தற்போது வரை துப்பாக்கி ரீமேக் உரிமையை முருகதாஸே வைத்துள்ளார். அவரே ஹிந்தியில் துப்பாக்கிப் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும் கூறினார். புதிய செய்தி என்னவென்றால் இப்படத்தில் அக்சய் குமார் நடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் படம் திரைக்கு வந்த பிறகுதான், ஹிந்தி படப்பிடிப்பிற்கான பணிகள் துவங்க உள்ளன. தற்போது நடித்து வரும் படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டு முருகதாஸுடன் இணைய உள்ளார் அக்சய் குமார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» துப்பாக்கியில் சரத்குமார்
» துப்பாக்கியில் ஜெய் நடிக்கவேயில்லை
» துப்பாக்கியில் 'ஜெய்' வெறும் வதந்திதான்!
» துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை : சரத்
» துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்
» துப்பாக்கியில் ஜெய் நடிக்கவேயில்லை
» துப்பாக்கியில் 'ஜெய்' வெறும் வதந்திதான்!
» துப்பாக்கியில் நான் நடிக்கவில்லை : சரத்
» துப்பாக்கியில் இணையும் விஜய், காஜல் அகர்வால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum