டெல்லி டெஸ்டில் சுவாரஸ்யமான சாதனைகள்
Page 1 of 1
டெல்லி டெஸ்டில் சுவாரஸ்யமான சாதனைகள்
டெல்லி டெஸ்டில் நேற்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் சரிந்ததுடன், 3–வது நாளிலேயே முடிவும் கிடைத்து விட்டது. ஆஸ்திரேலியாவை 3 நாட்களுக்குள் இந்தியா தோற்கடித்து இருப்பது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 2004–ம் ஆண்டு மும்பை டெஸ்டில் இவ்வாறு சீக்கிரம் வெற்றிக்கனியை பறித்துள்ளது.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் பட்டியலில் இந்திய கேப்டன் டோனி 3–வது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட் (12 வெற்றி), இங்கிலாந்தின் மைக் பிரியர்லி (11 வெற்றி) அவரை விட முன்னிலையில் உள்ளனர். அதற்கு அடுத்து டோனி, இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் ஆகியோர் தலா 8 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
* இந்த தொடரில் 4 டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி டாஸில் ஜெயித்து இருந்தது. 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரே அணியே 4 மற்றும் அதற்கு மேல் டாஸில் வெற்றி பெற்றிருப்பது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 1978–79–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் 5–ல் டாஸில் வென்று இருந்தது. ஆனால் அந்த தொடரிலும் 1–5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்று போய் இருந்தது.
* இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தழுவிய 7–வது தோல்வி (2008–ல் ஒன்று, 2010–ல் இரண்டு, 2013–ல் 4) இதுவாகும். இந்திய மண்ணில் தொடர்ந்து அதிக தோல்வியை சந்தித்த வெளிநாட்டு அணி ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியா இதற்கு முன்பு 1967–1994–ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 6 டெஸ்டுகளில் தோற்றது இந்த வகையில் அவர்களின் மோசமான பயணமாக இருந்தது.
* ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சிடில் 9–வது வரிசையில் களம் இறங்கி இரண்டு இன்னிங்சிலும் (51 ரன், 50 ரன்) அரைசதம் விளாசினார். இதன் மூலம் 9–வது வரிசையில் பேட் செய்து ஒரே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற அரிய சிறப்பை சிடில் பெற்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டெல்லி டெஸ்டில் சுவாரஸ்யமான சாதனைகள்
» சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி
» கிரிக்கெட்: கொல்கத்தா டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி
» சுவாரஸ்யமான டிப்ஸ்
» சுவாரஸ்யமான 25 கிச்சன் டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum