உறவுமில்லை, முறிவுமில்லை : சுருதி
Page 1 of 1
உறவுமில்லை, முறிவுமில்லை : சுருதி
ஹைதராபாத்தில் நடைபெற்ற 3 தெலுங்கு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை சுருதி, நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் பல புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
3 படத்தில் தனுஷுடன் நடித்தேன். அவர் ஒரு நல்ல நடிகர். ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தோம் என்பதைத் தவிர எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் இருக்கவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அப்போ தனுஷுடன் ஒன்றுமில்லை என்றால்.. சித்தார்த்துடன் என்ற எண்ணம் நமக்குத் தோன்றாதா? அதுதான் கேட்டோம்..
சித்தார்த்துடன் உங்களது நட்பு முறிந்துவிட்டதாகக் கூறப்படுகிறதே என்றதற்கு, இதற்கு முன்பு எங்களுக்குள் எந்த நட்பும் இல்லை. நட்பு இருந்தால்தான் முறிவு இருக்கும். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடிக்கிறோம். அவ்வளவுதான். தொழில் ரீதியாக நாங்கள் பேசிக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றார் தெளிவாக.
3 படம் தமிழிலும், தெலுங்கிலும் நிச்சயம் வெற்றி பெறும். இது ஒரு கல்ல நதை, தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஐஸ்வர்யா இப்படத்தை மிகச் சிறப்பாக படமாக்கியுள்ளார் என்றார் சுருதி. வந்ததற்கு வம்பு எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கடைசியாக சொன்னச் செய்தியோடு திரும்பினோம்...
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புரளிகளால் வெறுப்படைந்துள்ள சுருதி
» வேகமாக வளரும் சுருதி!
» சினிமாவும், இசையும் எனது இரு கண்கள்- சுருதி ஹாசன்
» கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
» கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- 2
» வேகமாக வளரும் சுருதி!
» சினிமாவும், இசையும் எனது இரு கண்கள்- சுருதி ஹாசன்
» கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
» கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum