புரளிகளால் வெறுப்படைந்துள்ள சுருதி
Page 1 of 1
புரளிகளால் வெறுப்படைந்துள்ள சுருதி
சில நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்கள் அதிகமாக வெளியாகிறதோ இல்லையோ, அவர்களைப் பற்றிய புரளிகள் அதிகமாக வெளியாகும். அந்த வகையில் தற்போது புரளிகளின் தரவரிசையில் முன்னிலையில் இருப்பவர் நமது சுருதி தான்.
கமலஹாசனின் பெண் என்ற தகுதியையும் தாண்டி, சிறந்த பாடகி, இசையமைப்பாளர், நடிகை என்று பல தகுதிகளை வளர்த்துக் கொண்ட சுருதி தமிழ், தெலுங்கு என ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால் அதற்குள் அவரைப் பற்றி வெளி வந்த புரளிகள் ஏராளம்.
சித்தார்த்துடன் சுருதி ஒரு படத்தில் நடித்தபோது, சுருதிக்கும் சித்தார்த்துக்கும் காதல், அவர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள் என்றார்கள். அதன்பிறகு 3 படத்தில் தனுஷுடன் நடிக்கும் போது தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சுருதி என்றெல்லாம் செய்தி போட்டு புரளியை பரப்பினார்கள்.
இதுபோன்ற புரளிகள் வரும் போது எரிச்சலாக இருக்கும் என்றும், இதனால், எனக்கும், எனது சக நடிகருக்கும் உள்ள தொழில் ரீதியான நட்பு பாதிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் சுருதி.
அவர் நடித்து தெலுங்கில் வெளியாகியுள்ள கபர் சிங் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்திருப்பதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உறவுமில்லை, முறிவுமில்லை : சுருதி
» வேகமாக வளரும் சுருதி!
» சினிமாவும், இசையும் எனது இரு கண்கள்- சுருதி ஹாசன்
» கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
» கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- 2
» வேகமாக வளரும் சுருதி!
» சினிமாவும், இசையும் எனது இரு கண்கள்- சுருதி ஹாசன்
» கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி
» கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி- 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum