பட வாய்ப்புகளை மறுக்கும் ரிச்சா
Page 1 of 1
பட வாய்ப்புகளை மறுக்கும் ரிச்சா
தமிழில் ஒஸ்தி மற்றும் மயக்கம் என்ன படங்களில் நடித்துள்ள நடிகை ரிச்சா, அடுத்து எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏன் என்று தெரியாமல் குழம்பியிருந்தோம்... ஏதேனும்.. காதல் கல்யாணம் என்று போகப்போகிறாரா என்று அவரையே கேட்டு விட கிளம்பினோம் மைக்கைத் தூக்கிக் கொண்டு..
பெங்காலி படம் ஒன்றில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ரிச்சாவைப் பார்த்ததும் நமக்கு கேட்க வந்த கேள்வியே தவறு என்ற எண்ணம் வந்துவிட்டது.
அது என்ன தமிழ் ரசிகர்கள் மீது அவ்வளவு கோபம்.. எந்த தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகாமல் தவிர்க்கிறீர்களே என்றதற்கு..
தமிழில் இதுவரை 8 கதைகளைக் கேட்டேன். எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. சும்மா வந்து போவது போன்ற கதைகளில் நடிக்க நான் விரும்பவில்லை. அதுபோல நடிக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ இல்லை.
நல்ல கதாபாத்திரமாக வந்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அதனால்தான் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறார் அம்மணி.
வந்ததற்கு எந்த செய்தியும் கிடைக்கவில்லையே என்று தொங்கிய முகத்தைப் பார்த்த அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.. தமிழில் வெற்றி பெற்ற சிறுத்தையின் தெலுங்கு ரீமேக் படத்தில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்று தகவலைச் சொல்லி நம்மைத் தேற்றி அனுப்பினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் எண்ணமில்லை: அமலா பால்
» போலி சினிமா வாய்ப்புகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம்: சசிகுமார் அறிவிப்பு
» பேச மறுக்கும் ஷங்கர்
» போதையில் தள்ளாடினேனா? – மறுக்கும் ஸ்ரேயா
» காதலை மறுக்கும் ஹன்சிகா
» போலி சினிமா வாய்ப்புகளை நம்பி பெண்கள் ஏமாற வேண்டாம்: சசிகுமார் அறிவிப்பு
» பேச மறுக்கும் ஷங்கர்
» போதையில் தள்ளாடினேனா? – மறுக்கும் ஸ்ரேயா
» காதலை மறுக்கும் ஹன்சிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum