புதிய அணி தலைமையில் ஃபெப்ஸியுடன் பேச்சு
Page 1 of 1
புதிய அணி தலைமையில் ஃபெப்ஸியுடன் பேச்சு
சென்னை, ஏப்: 21: தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ராவுத்தரின் தலைமையில் ஃபெப்ஸி அமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 15-ம் தேதி அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 250-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரனை நீக்கிவிட்டு இப்ராஹிம் ராவுத்தரை பொறுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக அரசு அங்கீகாரம்: பொதுக்குழுவின் முடிவுகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனுக்கும் அனுப்பப்பட்டன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் இடைக்கால நிவாரணக் குழுவுக்கு (அட்ஹாக் கமிட்டி) தனது அங்கீகாரத்தை அளித்து இப்ராஹிம் ராவுத்தர் தலைமையிலேயே இனி ஃபெப்ஸி அமைப்புடன் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவித்துள்ளார்.
இதையடுத்து ஏப்ரல் 25-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடரவுள்ளது.
திரையுலக பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்க முயற்சி எடுத்து வரும் தமிழக முதல்வருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ராஹிம் ராவுத்தர் தலைமையிலான அணியை அங்கீகரித்து ஃபெப்ஸி பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பு வலுவிழந்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு
» பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு
» ராமநாராயணன் தலைமையில் அவசர சமரச கூட்டம்!
» சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு!
» எஸ்.ஏ.எஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரி கமிஷனரிடம் கேயார் மனு
» பாலுமகேந்திரா தலைமையில் நீர்ப்பறவை இசை வெளியீடு
» ராமநாராயணன் தலைமையில் அவசர சமரச கூட்டம்!
» சென்னையில் கமல்ஹாசன் தலைமையில் பிக்கி மாநாடு!
» எஸ்.ஏ.எஸ் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரி கமிஷனரிடம் கேயார் மனு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum