ராமநாராயணன் தலைமையில் அவசர சமரச கூட்டம்!
Page 1 of 1

அஜீத் பேச்சு மற்றும் அதற்கு ரஜினி அளித்த ஆதரவு தொடர்பாக முரண்டு நிற்கும் தமிழ் சினிமா உலகில் சமரசம் ஏற்படுத்த அவசரக் கூட்டம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.
இக் கூட்டத்துக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார்.
நடிகர்-நடிகைகளை விழாக்களுக்கு நிர்ப்பந்தப்படுத்தியும், மிரட்டியும் அழைக்கிறார்கள் என்று அஜீத் வெளியிட்ட கருத்தால் திரையுலகம் பிளவு பட்டு நிற்கிறது கருத்து கூறினார். அவருக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.
ஆனால் பெப்சி, விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம் போன்றவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்த சங்கத்தின் தலைவருக்கு உரிமை இருக்கிறது என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார். சங்க முடிவுகளை ஏற்காமல் ஒற்றுமைக்கு குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் எச்சரித்தார்.
அஜீத் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரது படங்களை திரையிடுவதா? வேண்டாமா? என்பது பற்றி வருகிற 3ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதற்கிடையில் ஜாக்குவார் தங்கம் வீட்டில் ரஜினி, அஜீத் ரசிகர்கள் கல்வீசியதாக புகார் எழுந்தது. ஆனால் தங்களுக்கும் இந்தப் பிரச்சனைக்கும் தொடர்பே இல்லை என ரஜினி- அஜீத் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
இந்தப் பிரச்சனையில் ஜாகுவார் தங்கத்துக்கு திருமாவளவன் போன்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கவும், சமரசம் ஏற்படுத்தவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. அனைத்து திரைப்பட சங்கத்தினரையும் அவசரமாக அழைத்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் தியேட்டரில் இக்கூட்டம் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார்.
நடிகர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ராதாரவி, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் காரசாரமாக பேசப்பட்டது. எவ்வாறு ஒற்றுமையாக செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் சமரசத்துக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதே போல இனி இதுபோன்ற பிரச்சனைகளில் அவசரப்பட்டு அறிக்கை விடவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அவசரத்திற்கு !!
» கண்ணா லட்டு தின்ன ஆசையா? – ராமநாராயணன் – சந்தானம் – பவர் ஸ்டார் கைகோர்க்கிறார்கள்!
» அசின் இலங்கை சென்ற பிரச்சினை: திரைப்பட கூட்டுக்குழுவில் ஒரு வாரத்தில் முடிவு – ராமநாராயணன்
» சமரச பேச்சுவார்த்தையை ரகசிய கேமராவால் படம்பிடித்த சோனா!
» பிரமாண்ட டைரக்டரின் அவசர முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum