சினிமா நூற்றாண்டு மாளிகை திறப்பு
Page 1 of 1
சினிமா நூற்றாண்டு மாளிகை திறப்பு
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையால் கட்டப்பட்டுள்ள சினிமா நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்து, மற்றொரு சினிமா நூற்றாண்டு மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது, பேரறிஞர் அண்ணாவால் இந்த வர்த்தக சபையின் சொந்தக் கட்டடம் 15.6.1968 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இச்சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மற்றும் இத்துறையைச் சார்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் புதிய மாளிகை கட்டி முடிக்கப்பட்டதும், நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். புதிய கட்டடத்தை திறந்து வைக்க நானே நேரில் வருகிறேன் என்பதை தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா.
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா: கலைஞர்கள் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு
» 2-ம் நூற்றாண்டு தமிழில் 20 நூற்றாண்டு படம்! – உருமி பாடல் பற்றி வைரமுத்து
» வருகிறது வசந்த மாளிகை
» நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமா: கலைஞர்கள் குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு
» 2-ம் நூற்றாண்டு தமிழில் 20 நூற்றாண்டு படம்! – உருமி பாடல் பற்றி வைரமுத்து
» வருகிறது வசந்த மாளிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum