பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,ஏப்.25: சிவகங்கை, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதுக்கு முன்பாக பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் பழனி முத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 2009ம் ஆண்டு சட்டசபையில் பெரம்பலூர் அடுத்த குன்னத்தில் ரூ.100 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போது வரை அங்கு கட்டுமானப்பணி எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட சிவங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது என்றும மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவகங்கை, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதுக்கு முன்பாக பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் வடிவேலு வழக்கை விசாரிக்க தடை: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
» இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான ‘அட்ஹாக் கமிட்டி’க்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு
» விஸ்வரூபம் பட விவகாரத்தில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
» பொன்னர் சங்கர் படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி! – உயர்நீதிமன்றம்
» லட்சுமி ராய் பற்றி செய்தி வெளியிட குமுதத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum