விஸ்வரூபம் பட விவகாரத்தில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
Page 1 of 1

‘விஸ்வரூபம்’ படத்துக்கு அரசின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என ஐகோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என நடிகர் கமல்ஹாசனுக்கு நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், சுமார் ரூ.100 கோடி செலவில் தயாரித்துள்ள படம் ‘விஸ்வரூபம்’. கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இந்த படம், பொங்கலன்று ரிலீஸ் ஆக இருந்தது. தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டிடிஎச்ல் படத்தை வெளியிட கமல்ஹாசன் முடிவு செய்தார். இதற்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுடன் கமல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமுக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜனவரி 25ம் தேதி தியேட்டர்களில் விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவும், பிப்ரவரி 2ம் தேதி டிடிஎச்ல் ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக கூறி ‘விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம் என அறிவித்தனர். இதுபற்றி மாவட்ட வாரியாக, கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்களிடம் உள்துறை செயலாளரும் டிஜிபியும் அறிக்கை பெற்றனர். இதையடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறி, தமிழகத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட 2 வாரத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால், அறிவித்தபடி தமிழகத்தில் கடந்த 25ம் தேதி படம் வெளியிடப்படவில்லை. தமிழக அரசின் தடையை எதிர்த்து ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், ‘படத்தை பார்த்து விட்டு 28ம் தேதி (இன்று) தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறினார். அதன்படி, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நேற்று முன்தினம் ‘விஸ்வரூபம்’ படத்தை நீதிபதி வெங்கட்ராமன் பார்த்தார். அவருடன் ஐகோர்ட் தலைமை பதிவாளர், 5 பதிவாளர்கள், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மற்றும் இரு தரப்பு வக்கீல்கள் உள்பட 50 பேர் படம் பார்த்தனர்.
இதற்கிடையே, ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் அதற்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத், பார்த்திபன், இயக்குனர் பாரதிராஜா உள்பட பலர் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில், ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் இன்று காலை நீதிபதி வெங்கட்ராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: கமல் தரப்பு வக்கீல் பி.எஸ்.ராமன்: தடை உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தை வெளியிட அனுமதி அளிக்க வேண்டும்.
நீதிபதி: இந்தப் படத்தை நான் பார்த்தேன். கமல்ஹாசன், அமெரிக்காவில் இருந்து வந்துவிட்டார். அவர் அளித்த பேட்டியையும் படித்தேன். இந்த படத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னையோ, மதக் கலவரமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலையாக உள்ளது. அந்த நோக்கத்தில் இந்த பிரச்னையை பார்ப்பதுதான் என் எண்ணமாக உள்ளது. எனவே, இதற்கு சுமுகமான தீர்வு காண வேண்டும். அதிகாரிகளுடன் பேசி சுமுக முடிவு காண முயற்சி செய்யுங்கள். நாளை தீர்ப்பு கூறுகிறேன்.
பி.எஸ்.ராமன்: கமல் சென்னை வந்துவிட்டார். முதல்வரை சந்தித்து சுமுக தீர்வு காண முயற்சி செய்கிறோம்.
முஸ்லிம்கள் தரப்பு வக்கீல் சங்கரசுப்பு: இஸ்லாமியர்களை பாதிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும்.
நீதிபதி: இப்போது யாரும் பேச வேண்டாம். நாளை தீர்ப்பு அளிக்கிறேன். இவ்வாறு வாதம் நடந்தது.
கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து கமல் ரசிகர்கள் பலர் ஐகோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். தீர்ப்பு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை திரும்பினார் கமல்ஹாசன்
‘விஸ்வரூபம்’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுவது தொடர்பான ஏற்பாடுகளை செய்ய, நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். அப்போதுதான் தமிழகத்தில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்த கமல், இன்று அவசரமாக சென்னை திரும்பினார். அதிகாலை 2.15 மணிக்கு துபாய் வழியாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் கமலிடம் பேட்டி எடுக்க தனியார் தொலைகாட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்காமல் கமல்ஹாசன் காரில் ஏறி சென்றுவிட்டார். நீதிபதி கூறியுள்ள யோசனையின்படி, அரசு உயரதிகாரிகளை கமல் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடையை நீக்க வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை… ‘கவுன்சில்’ கலாட்டா!
» துப்பாக்கி பட வழக்கு: தீர்ப்பை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்
» காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு
» 100 சதவீதம் துல்லியமாகாத வரை நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum