தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலகலப்பு இரண்டாம் பாகம்

Go down

கலகலப்பு இரண்டாம் பாகம் Empty கலகலப்பு இரண்டாம் பாகம்

Post  ishwarya Tue Mar 26, 2013 11:35 am



கலகலப்பு படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் திரையரங்குகளில் சிரிப்பொலி மிகச் சத்தமாகக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுவிட்டது இந்த படம்.

படத்தில் விமலும், ஷிவாவும் சகோதரர்கள். இவர்கள் தங்கள் மூதாதையர் நடத்தி வந்த மசாலா கபேயை முன்னேற்றப் பாடுபடுவதே கதையின் சாராம்சம். நடுவில், விமல் அஞ்சலியைக் காதலிக்க, ஷிவா ஓவியாவைக் காதலிக்க, சந்தானம் எப்போதும் போல ஏமாந்து போகும் தாய்மாமனாக வந்து வயிற்று வலியை உண்டு பண்ணுகிறார்கள்.

தமிழில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதனை ரீமேக் செய்வோம் அல்லது இரண்டாம் பாகம் தயாரிப்போம். கலகலப்பு படத்திற்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு வட்டம் முடிவு செய்துள்ளது.

இப்படத்தையும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க சுந்தர் சி இயக்க உள்ளார். அதே நடிகர், நடிகைகளை வைத்து இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுந்தர் சி தற்போது விஷாலை வைத்து இயக்கி வரும் மதன் கஜன் ராஜா (எம்ஜிஆர்) படத்தை முடித்துவிட்டு அக்டோபர் மாதத்தில் கலகலப்பு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum