தமன்னா, ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும் : சந்தானம்
Page 1 of 1
தமன்னா, ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும் : சந்தானம்
கோலிவுட் வட்டாரத்தில் தற்போது சிறந்த காமெடியன்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சந்தானம், பல படங்களில் கதாநாயகன்களுக்கு இணையாக நடித்திருக்கும் சந்தானத்தை பார்த்து ஒரு சில கேள்விகளை கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். திடீரென அவர் வீட்டில் இருப்பதாக வந்த தகவலை அறிந்து கொண்டு அவரை தொடர்பு கொண்டு கேட்டோம்.
வாருங்கள் வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். விரைந்து சென்றோம் அவரைப் பார்க்க. அவரைப் பார்த்ததும் நாம் கேட்க நினைத்திருந்த கேள்விகள் எல்லாமே மறந்துவிட்டது. அவரையே பேசச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தோம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நன்றியைக் கூற வேண்டும்.. எனது முதல் அறிமுகம் டிவியில் லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் அமைந்தது. அக்குழுவை என்னால் மறக்கவே முடியாது என்றார்.
வடிவேலு சினிமாவில் இருந்து வெளியேறியதால்தான் என்னால் முன்னுக்கு வர முடிந்தது என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் ஒருவருடைய வீழ்ச்சி மற்றொருவருடைய வளர்ச்சிக்குக் காரணமாகாது. ஒரு நாள் நான் தோல்வி அடைந்தால் அது என்னுடைய நகைச்சுவை மக்களுக்குப் பிடிக்காமல் போகும் போதுதான் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவரது மனதை பாதித்த புரளிக்கு அவரே பதிலளித்தார்.
உங்களுக்குப் பிடித்த கதாநாயகிகள் யார் என்று கேட்டதற்கு, காமெடியனாகிவிட்டதால் கதாநாயகிகளோடு ஜோடி சேரும் ஆசை எல்லாம் எதுவும் இல்லை. ஆனால், தமன்னா மற்றும் ஹன்சிகாவோடு நடிப்பது மிகவும் ஜாலியாக இருக்கும். படப்பிடிப்பின் போது அவர்களை கிண்டிலடித்துக் கொண்டே இருப்பேன். அவர்கள் கோபமாக என்னைத் திட்டுவதை மிகவும் ரசிப்பேன் என்கிறார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காமெடி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் : வினய்
» விஜய் மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : அபிஷேக்!
» அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: விஜய் அம்மா ஷோபா.
» எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்: திரிஷா
» "நடுத்தர குடும்ப பெண் வேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் : அஞ்சலி.
» விஜய் மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : அபிஷேக்!
» அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: விஜய் அம்மா ஷோபா.
» எனக்கு குழந்தைகள் மற்றும் பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்கும்: திரிஷா
» "நடுத்தர குடும்ப பெண் வேடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் : அஞ்சலி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum