மீண்டும் நடிக்கிறார் செளகார் ஜானகி!
Page 1 of 1
மீண்டும் நடிக்கிறார் செளகார் ஜானகி!
சென்னை, ஜூன் 18: பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி(81) பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.
நாடகத் துறையில் ஈடுபட்டு வந்த செüகார் ஜானகி 1949-ம் ஆண்டு தெலுங்குப் படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 385 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஜ்மோகன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் "வானவராயன் வல்லவராயன்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் செüகார் ஜானகி. மீண்டும் நடிக்க வருவது குறித்து அவர் கூறியதாவது:
பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நடிப்பது, அதுவும் தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய 62 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் எத்தனையோ கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன்.
"ஹே ராம்' படத்தில் என்னை நடிக்க அழைத்திருந்தார் கமல். "பார்த்தால் பசி தீரும்' படத்தில் குழந்தையாக நடித்த கமல் என்னை வைத்து இயக்கும் அளவுக்கு வளர்ந்ததை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன். அதற்குள் எனக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. மேற்கொண்டு நடிக்க முடியாமல் போய்விட்டது.
ஆனாலும் எனக்குப் பேசிய தொகையை மொத்தமாக ஒரே "செக்'கில் கமல் அனுப்பி வைத்தார். அந்த நேரத்தில் அந்தத் தொகைதான் என்னுடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவியது. அதை எப்போதும் மறக்க மாட்டேன் என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் கோபிகா
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வனிதா!
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அப்புக்குட்டி!
» மீண்டும் நடிக்கிறார் கோபிகா
» மீண்டும் நடிக்கிறார் வடிவேலு
» மீண்டும் நடிக்கிறார் வனிதா!
» மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அப்புக்குட்டி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum