தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்: விஜய் வேண்டுகோள்

Go down

மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்: விஜய் வேண்டுகோள் Empty மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்: விஜய் வேண்டுகோள்

Post  ishwarya Mon Mar 25, 2013 2:07 pm



சென்னை, ஆக. 2: நற்பணிகளின் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியது:

என்னுடைய ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

என்னுடைய ஒவ்வொரு ரசிகரும் முதலில் தங்களுடைய குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தங்களால் இயன்ற அளவு நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக, கிராமங்களுக்கு நேரில் சென்று நற்பணிகளைச் செய்து அவற்றின் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும். சிறப்பான முறையில் நற்பணியாற்றும் ரசிகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் என விஜய் அவ்வப்போது கூறி வருகிறார். இதையடுத்தே அவருடைய ரசிகர் மன்றம், மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவளித்தது.

இந் நிலையில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் பிரவேசம் குறித்து விஜய் ஏதாவது பேசுவார் எனக் கருதி ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பழைய படங்களை பாதுகாக்க வேண்டும் : கமல் வேண்டுகோள்!!
» கண்தானம் செய்யுங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்
» விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» சிறு படங்களுக்கு பெரிய தயாரிப்பாளர்கள் உதவ வேண்டும் : பார்த்திபன் வேண்டுகோள்
» திருட்டு சிடியில் கேட்காதீங்க…ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum