தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Go down

விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள் Empty விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:19 pm



"விஸ்வரூபம்' படம் தொடர்பான பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட கமலுக்கு உறுதுணையாக இருக்க முஸ்லிம் அமைப்புகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"விஸ்வரூபம்' படம் தொடர்பாக கடந்த சில நாள்களாக எழுந்துள்ள பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கமல்ஹாசன் என் 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும் படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். "விஸ்வரூபம்' படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே, முஸ்லிம் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களின் பார்வைக்கு திரையிட்டதிலிருந்தே முஸ்லிம் சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பும், மரியாதையும் தெரிகிறது.

மேலும் இந்தப் படத்தைத் தயாரிக்க கமல்ஹாசன் என்னென்ன சிரமங்களை அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. அவர் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தப் படத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு அவருடன் கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மீலாது நபி வாழ்த்துகளுடன் முஸ்லிம் சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» 'விஸ்வரூபம்' பட பிரச்சினை நாளை தீர்ப்பு: சமரசம் பேச நீதிபதி யோசனை
» விஸ்வரூபம் படத்தால் கமலுக்கு ஏற்பட்டு இருக்கும் இக்கட்டான நிலையை பார்த்து ‌போனில் கமலை தொடர்பு கொண்ட ரஜினி, அவரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். கமலின் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது, அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டை நாடினார்
» மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும்: விஜய் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum