தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

"மைனா' வெற்றி 20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன்: இயக்குநர் பிரபு சாலமன்

Go down

"மைனா' வெற்றி 20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன்: இயக்குநர் பிரபு சாலமன் Empty "மைனா' வெற்றி 20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பலன்: இயக்குநர் பிரபு சாலமன்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:07 pm



திருச்சி, செப். 24 : "மைனா' திரைப்படத்தின் வெற்றி எனது 20 ஆண்டுகால உழைப்புக்குப் பிறகே கிடைத்தது என்றார் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமன்.

திருச்சி தூய வளனார் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் முன்னாள் மாணவர் சங்கத் தொடக்க விழா மற்றும் மாணவர் சந்திப்பு விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஆங்கிலத் துறை முன்னாள் மாணவரான பிரபு சாலமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது: மனிதனின் வாழ்க்கையை இயக்குபவர் கடவுள். அவரைத் தவிர சிறந்த இயக்குநர் யாரும் இருக்க முடியாது. சிறு வயதிலிருந்தே திரைத் துறையின் மீது எனக்கு ஆர்வமிருந்தது. எனது பல படங்கள் தோல்வியைத் தழுவின.

இந்தத் தோல்விகளுக்குப் பிறகும் வெற்றிபெற வேண்டும்; அது தனியாக உலகுக்குத் தெரிய வேண்டும் என்ற லட்சியத்தோடு, மன உறுதியோடு உழைத்ததன் பலனாகத்தான் "மைனா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் அது. "மைனா' படத்தைத் தொடங்கும் போது என்னிடம் இருந்தது ரூ. 1.5 லட்சம் மட்டுமே. வெறும் பிலிம் மட்டும் கொடுங்கள் உணர்வுகளை நான் பதிவு செய்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டுதான் "மைனா' திரைப்படத்தை எடுக்கப் புறப்பட்டேன்.

மற்றவர்கள் வழியில் நான் செல்ல விரும்பவில்லை. எனது வழியை பலர் பின்பற்ற வேண்டுமென எண்ணுபவன் நான். நாம் எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடைய வேண்டுமெனில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை அவசியம். நான் நல்ல பழக்கங்களைக் கொண்டிருப்பதற்கு காரணம் இந்தக் கல்லூரிதான் என்றார் அவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum