இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
Page 1 of 1
இளையராஜா, நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் "நந்தி' விருது
திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை நயன்தாரா ஆகியோருக்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த தெலுங்கு திரைப்படக் கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் நந்தி விருதுகளை அளித்து கௌரவித்து வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டுக்கான இவ்விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த இசையமைப்பாளராக இளையராஜா (ராமராஜ்யம்), சிறந்த நடிகராக மகேஷ்பாபு (தூக்குடு), சிறந்த நடிகையாக நயன்தாரா (ராமராஜ்யம்), சிறந்த துணை நடிகராக பிரகாஷ்ராஜ் (தூக்குடு) இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த வில்லனாக நடிகை லட்சுமி மஞ்சு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படங்களாக ராமராஜ்யம், ராஜண்ணா, விரோதி ஆகிய 3 படங்கள் தேர்வாகியுள்ளன. மொத்தமுள்ள 64 விருதுகளில் 6 விருதுகளை, தெலுங்கானா பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இளையராஜா, நயன்தாராவுக்கு நந்தி விருது
» அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது
» சிறந்த நடிகைக்கான நந்தி விருது: நயன்தாராவுக்கு அமிதாப்பச்சன் வழங்கினார்
» ஏவிஎம் சரவணனுக்கு ஆந்திர விருது
» சீதையாக நடித்த நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum