பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் யஷ் சோப்ரா காலமானார்
Page 1 of 1
பழம்பெரும் பாலிவுட் இயக்குநர் யஷ் சோப்ரா காலமானார்
பழம்பெரும் பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான யஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 80.
நாட்டின் பிரிவினைக்கு முன்பு, லாகூரில் பஞ்சாபிக் குடும்பத்தில் 1932இல் பிறந்தார் யஷ் சோப்ரா. மும்பையில் இயக்குநர் ஐ.எஸ்.ஜோகர் மற்றும் தனது மூத்த சகோதரரும், இயக்குநருமான பி.ஆர்.சோப்ரா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். சோப்ரா சகோதரர்கள் இணைந்து 1950 மற்றும் 1960ஆம் ஆண்டுகளில் பல்வேறு வெற்றிப்படங்களை வழங்கினர். "தீவார்' படத்தின் மூலம் அமிதாப் பச்சனை கோபக்கார இளைஞனாகச் சித்திரித்து, சூப்பர் ஸ்டார் ஆக்கிய பெருமை யஷ் சோப்ராவையே சாரும்.
அதன் பின் அமிதாப்பை வைத்து "கபி கபி' என்ற காதல் படத்தையும், "திரிசூல்' என்ற ஆக்ஷன் படத்தையும் அவர் இயக்கினார். ஷாருக்கான் உள்பட பல நடிகர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க அவரது படங்கள் காரணமாக இருந்தன. 6 தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளைப் பெற்றவர் சோப்ரா.
சுமார் 50 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்த அவர் சமீப காலமாக உடல்நலம் குன்றியிருந்தார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யஷ் சோப்ரா ஞாயிற்றுக்கிழமை மாலையில் காலமானார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
» பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்
» பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் காலமானார்
» பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!!
» பழம்பெரும் நடிகை எஸ்.பானுமதி காலமானார்
» பழம்பெரும் ஒளிப்பதிவாளர் கர்ணன் காலமானார்
» பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் காலமானார்
» பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!!
» பழம்பெரும் நடிகை எஸ்.பானுமதி காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum