தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

Go down

பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்  Empty பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

Post  ishwarya Mon May 27, 2013 6:02 pm

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 24ம் திகதி மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், அறுபது ஆண்டுகளாக பின்னணி பாடகர்களில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி. ராமாராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பழம் பெரும் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த சவுந்தரராஜன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை(26.05.13) நடைபெறுகிறது.

பத்ம ஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள சவுந்தரராஜன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum