தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் காலமானார்

Go down

பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் காலமானார்  Empty பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் காலமானார்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:56 pm

சென்னை: பழம்பெரும் இயக்குனர் எஸ்.ராமநாதன் நேற்று காலமானார். அவருக்கு வயது 83. அவருக்கு கலாவதி என்ற மனைவியும், சிபிஷ் என்ற மகனும் ஷைரா, உமா என்ற மகளும் உள்ளனர். அவரது உடல் சென்னை தி.நகர், கிரி ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது.
எஸ்.ராமநாதன் பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். பிறகு இந்தியில் படங்களை இயக்கினார்.

அங்கு முன்னணி இயக்குனராக இருந்தார். அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பரான இவர், அவர் நடித்த ‘பாம்பே டூ கோவா’, ‘மகான்’ உட்பட 5 படங்களை இயக்கி உள்ளார். அங்கு 20 படங்கள் இயக்கி உள்ளார். தமிழில், ‘பட்டத்து ராணி’, ‘இருதுருவம்’, ‘பொண்ணு மாப்பிள்ளை’, ‘நாடோடிகள்’ படங்களை இயக்கினார். ‘தர்மதுரை’, ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படங்களை தயாரித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், என்.டி.ராமாராவ், கமல், ரஜினி உட்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணியாற்றி உள்ளார். மொத்தம் அவர் 28 படங்கள் இயக்கி உள்ளார். 7 படங்களை தயாரித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum