அருள்மிகு நெல்லையப்பர் -அருள்தரும் காந்திமதி அம்பாள் கோவில்
Page 1 of 1

தாமிரபரணி நதிபாயும் தென்பாண்டி சீமையில் நெல்லை மாநகரின் மேற்கு கரையில் நகருக்கு மையமாக நெல்லையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. சிவபெருமானின் திருவிளையாடல் தலங்களில் பெரும் சிறப்பு பெற்ற நெல்லையப்பர் ஆலயத்தில் 1974-ம் ஆண்டு கடைசியாக திருப்பணியுடன் கும்பாபிஷேகம் நடந்தேறியது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் 30 ஆண்டு காலத்துக்கு பிறகு இப்போது ரூ.3 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் திருப்பணிகள் இரண்டாண்டு காலமாக நடந்தேறி நிறைவு பெற்று விட்டது.
மாநகரின் நடுநாயகமாக விளங்கும் நெல்லையப்பரின் வானுயர் ராஜகோபுரம் மிகுந்த எழிலுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் அரங்கேறி உள்ள திருப்பணிகளை ஒவ்வொருவரும் கண்டு தரிசித்து நெல்லையப்பரின் அருளை பெறும் புண்ணிய தினம்.
நெல்லையப்பர் கோவிலின் மேற்புற தோற்றம்:
இம்மாநகரில் ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைக்கு நெல்லையப்பரின் திருநாம பெயரிடுவது தொன்று தொட்டு வரும் பழக்கமாகும். இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தின் வரலாற்றை பார்ப்போம். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் 11-வது திருத்தலம் நெல்லையப்பர் திருத்தலம்.
வேணுவனம், தாருகாவனம், பிரமவிருத்தபுரம் என்றும் இந்த தலம் அழைக்கப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, அகத்தியர் ஆகியோர் இங்கு வழிபாடு செய்து உய்வடைந்த தலம்.
நெல்லை மாநகரின் மத்தியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் கலையழகும் சிலையழகும் கொண்ட கலாசார பொக்கிஷமாக விளங்குகிறது நெல்லையப்பர் கோவில். சைவ சமய குரவர் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தர் இந்த திருத்தலம் குறித்து பாடி இருப்பதால் 7_ம் நூற்றாண்டுக்கு முந்தைய கால கட்டத்தை சேர்ந்ததாக இந்த கோவில் இருக்கும்.
முதல் முதலில் சுவாமி-அம்பாள் கோவில்கள் தனித்தனியாக கட்டப்பட்டு பின்பு இணைக்கப்பட்டு ஒரே கோவிலாக ஆனதாக வரலாறு கூறுகிறது.
போக்குவரத்து வசதி:
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல பஸ் மற்றும் ரெயில் வசதி உள்ளது. சென்னையில் இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் திருநெல்வேலிக்கு சென்று பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது டவுன் பஸ் மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில் திருச்செங்கோடு
» சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில்
» சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில்
» அருள்மிகு பத்ரிநாத் கோவில்
» அருள்மிகு பத்ரிநாத் கோவில்
» சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில்
» சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோவில்
» அருள்மிகு பத்ரிநாத் கோவில்
» அருள்மிகு பத்ரிநாத் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum