தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேச்சின் முதல் வெற்றி

Go down

பேச்சின் முதல் வெற்றி Empty பேச்சின் முதல் வெற்றி

Post  oviya Sun Mar 24, 2013 7:12 pm

தரையில் கிடத்தப்பட்டுள்ள இருபது அடி நீளமுள்ள ஒரு பலகை மீது உங்களை நடக்கச் சொன்னால், நடப்பீர்களா? நடப்பதென்ன, ஓடவே செய்வீர்கள் அல்லவா? ஆனால், அதே பலகையை, நூறடி உயரம் கொண்ட இரண்டு கட்டிடங்களன் உச்சிகளை இணைக்குமாறு கிடத்தி அதன் மீது நடக்கச் சொன்னால் …… !
மேடையில் பேச ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது, நம் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு சிக்கல் வருவது இது போன்ற ஒரு பயத்தினால்தான். ஆனால், ஒரு சர்க்கஸ் வீரர் இதை எந்த விதமான பயமுமின்றிச் செய்கிறாரே,
அது எப்படி ?அதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொண்ட பயிற்சிதான். மேடைப் பேச்சையும் இது போலவே நாம் பழகிக் கொள்ளலாம். அந்தப் பயிற்சிப் படிகள் என்னென்ன?
ஒரு தலைப்புப் பற்றி நம்முடைய புதுமையான கருத்து ஒன்று.
அதற்குண்டான தகவல்கள் மற்றும் தரவுகளைத் திரட்டுதல்
உரைக்கு மெருகு ஏற்றுதல் அல்லது அதை அலங்கரித்தல்.
தயாரித்த உரையை பல முறை பேசிப் பழகுதல்.
மேலே கூறப்பட்டுள்ள நான்கும் தான் எந்த ஒரு பேச்சுக்கும் அடிப்படை. பழகுநர் முதல் பழுத்த பேச்சாளர் வரை இந்தப் பாதையில் தான் பயணம் செய்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம் தான். நாம் மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டு கடக்கும் இந்த நான்கு படிகளையும், தேர்ந்த பேச்சாளர்கள் மிக எளதாகவும், குறைவான நேரத்திலும் தாண்டி விடுகிறார்கள். அதுவே நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அவர்களுடைய திறமை. எடுத்துக்காட்டாக “முயற்சி” என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உடனேயே, “முயற்சி திருவினையாக்கும்’ ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ போன்ற பழமொழிகள் நம் சிந்தனையை முற்றுகை இடும். முயல், ஆமை, முயலாமை போன்ற வார்த்தைச் சிலம்பங்களும் கூட்டணி அமைக்கும்.
“ஆப்ரஹாம் லிங்கன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோர் தோல்விகளைத் தழுவிய கதைகள் நினைவிற்கு வரும். இந்தப் பாதையில் நம் உரை தயாரிக்கப் பட்டால் அது “விர்ர்ர்ர்’ … என்று கிளம்பி மேலே பறக்காமல் “பொத்’ என்று கீழே விழுந்து விடும். ஏன்?”
இதுதான் எல்லோருக்கும் தெரிந்ததாயிற்றே. கேட்டுக் கேட்டு அலுத்துப் போலிருக்கும் அல்லவா? நாம் வேறு ஏதாவது கருத்தை ஒரு மாறுதலான கோணத்தில் சொல்ல வேண்டாமா ? முயற்சி என்ற பதத்தை விளக்குவதை ஓரிரு வரிகளல் முடித்து விட வேண்டும். பின்னர், முயற்சி என்பது நம் அனைவருடைய சக்திக்கு உட்பட்டது தான். ஆனால், கடந்த கால எதிர்மறை அனுபவங்களன் காரணமாக இதை நாம் நம்ப மறுக்கிறோம். இதற்கு உண்டான உளவியல் காரணங்கள் இவை இவை என்று சொல்லலாம்.
உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். என் நண்பர் ஒருவர் பட்டப் படிப்பு படிக்கும் காலத்தில் கல்லூரியில் நடந்த ஒரு ஓட்டப் பந்தயதில் கலந்து கொள்ள விரும்பினார். பள்ளப் பருவத்திலிருந்தே இது போன்ற போட்டிகளல் பங்கேற்று, பரிசுகள் வென்றிருந்தால் தான் இங்கே அனுமதி என்று சொல்லி விட்டனர் நிர்வாகிகள். இவரது உடல் தோற்றமும் விளையாட்டு வீரர் போல் இருக்காது. எனவே, நண்பர் துவண்டு போனார்.
பின்னர், வீட்டின் அருகே இருந்த ஒரு திடலில் தன்னந்தனியே ஓடத் தொடங்கினார். குறுகிய தூர ஓட்டம் என்று ஆரம்பித்தது, நாளடைவில் நீண்ட தூர ஓட்டமாக (ஙஹழ்ஹற்ட்ர்ய்) மாறியது. பின்னர், கல்லூரியில் தொடங்கி, பல்கலைக் கழகம், தேசிய அளவிலான போட்டிகள் என்று பல தடகளங்களல் பங்கேற்று, வெற்றி அடைந்தார்.
அனுமதி மறுக்கப்பட்ட பொழுது அவர் சோர்ந்து போனது இயல்பான ஒன்றாகும். ஆனால், அந்த அளவிலேயே நின்று விடாமல், ஆழ்ந்து சிந்தித்து, தனது பலம் என்ன என்பதைக் கண்டறிந்தார். குறுகிய தூர வேக ஓட்டம் தனக்குப் பொருந்தாவிட்டாலும், நீண்ட தூர ஓட்டத்தைத் “தாக்குப் பிடிக்கும்” திறன் தன்னிடம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார். தொடர் பயிற்சி மூலம் அதை உறுதியாக்கினார். விடாமுயற்சியால் கோப்பைகளையும் பதக்கங்களையும் குவித்தார். கண்டறிந்தார். குறுகிய தூர வேக ஓட்டம் தனக்குப் பொருந்தாவிட்டாலும், நீண்ட தூர ஓட்டத்தைத் “தாக்குப் பிடிக்கும்” திறன் தன்னிடம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார். தொடர் பயிற்சி மூலம் அதை உறுதியாக்கினார். விடாமுயற்சியால் கோப்பைகளையும் பதக்கங்களையும் குவித்தார்.
இந்த உதாரணம் நமக்கு மிக அண்மையானது. செய்தியும் புதியது. நமது பேச்சில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டால், மக்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். முயற்சி என்பதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதையும் நாம் இங்கே விளக்குகிறோம், அல்லவா. அட, நம்மாலும் கூட பின்பற்ற முடியும் போலிருக்கிறதே, என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். அதுவே நம்முடைய பேச்சின் முதல் வெற்றியாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum