வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்
Page 1 of 1

ஸ்தல வரலாறு...
தஞ்சை கீழவாசல் பகுதியில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில் உள்ளது. இங்கு உற்சவ விநாயகர் மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். சுவேத விநாயகர் என்றால் `வெள்ளை விநாயகர்' என்று பொருள். சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்கு `கோட்டை விநாயகர்' என்ற இன்னொரு பெயரும் உண்டு.
திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்கிறார்கள். வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள்.
அனைவரும் சிவனிடம் முறையிட... அவர் முருகப்பெருமானை போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த முருகப்பெருமான், அண்ணனான விநாயகரை அனுப்பி வைத்தார். அவர் அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார்.
மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று சாபம் பெற்றிருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தை அடைந்தாள். அவள் விநாயகரையே மணம் புரிந்தாள் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்
» ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாச நாதர் கோவில்

» மலை முந்தல் விநாயகர் கோவில்
» ஸ்ரீஞானம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum