தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்

Go down

வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில் Empty வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்

Post  meenu Mon Jan 14, 2013 2:52 pm

முன்னொரு காலத்தில் வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவபெருமானிடம் வந்து முறையிட்டனர். அவரோ ஸ்ரீபாலமுருகனைப் போருக்கு அனுப்பினார்.

அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கி, தனது மடியில் அமர்த்திக்கொண்டார் கணபதி.

மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். ஸ்ரீவிநாயகரையே மணம் புரிந்தாள். இந்த புராண வரலாற்றின்படி அமைந்த கோவில்தான் தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் கோவில்.

திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum