கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்-திருநல்லூர்
Page 1 of 1
கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்-திருநல்லூர்
இந்த கோவில் கோச்செங்கட் சோழன் கட்டியதாகும். ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. அம்பாள் கிரிசுந்தரி தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அகத்தியர், காசி விஸ்வநாதர், கணநாதர், காசி விநாயகர், பாணலிங்கம், விஸ்வநாதர், முருகன், நால்வர், குந்திதேவி, தெட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரை மண்டபங்களிலும், பிரகாரத்திலும் தரிசிக்கலாம். தலவிருட்சமான வில்வ மரம் மிகவும் பழமையானது.
இதை "ஆதிமரம்' என அழைக்கின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் இது ஆகும். இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.
இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் காடப் பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
சிறப்பம்சம்:
இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் தினமும் ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சிதருகிறார்.
எனவே இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என கூறப்படுகிறார். இத்தல மூலவர் சுயம்பு. பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்திதேவி இத்தலத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றது ஒரு மாசிமக நாளாகும்.
எனவே இந்த சப்தசாகர தீர்த்தத்தில் நீராடுவதால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவபூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது.
போக்குவரத்து வசதி:
பாபநாசத்தை அடுத்து வரும் வாழைப்பழக்கடை என்ற ஊரில் இருந்து பிரியும் கோவிந்தக்குடி செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால் இந்த கோவிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் இந்த கோவில்உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum