திருநல்லூர் கோயில்
Page 1 of 1
திருநல்லூர் கோயில்
பாபநாசம் - கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருநல்லூர். இங்கு இறைவனாக கல்யாண சுந்தரரும், இறைவியாக கல்யாண சுந்தரியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிந்து வருகின்றனர்.
இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது. மேலும், வேறு எங்கும் எளிதில் காண முடியாத தோற்றத்தில் இத்தலத்தில் சனீஸ்வரனின் நேர் பார்வையில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார்.
இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்றாலும் தீபாவளியன்று மகாலட்சுமிக்கும், சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜையில் கலந்து கொண்டால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி போன்ற சனி தோஷங்கள் நீங்குவதுடன், கல்விச்செல்வம், பொருட்செல்வம் போன்ற செல்வங்கள் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும், தீபாவளி அன்று இங்குள்ள மகாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சமயத்தில் காளி அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் குழந்தை இல்லாத தம்பதிகள், அம்மனை மனம் உருக வேண்டிக் கொண்டு படியில் நெய் இட்டு மெழுக வேண்டும். அவ்வாறு செய்தால் எளிதில் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருநல்லூர் கோயில்
» திருநல்லூர் கோயில்
» கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்-திருநல்லூர்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» கோயில் கோயில்
» திருநல்லூர் கோயில்
» கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்-திருநல்லூர்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்
» கோயில் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum