திருவல்லீசுவரர் கோவில்-பாடி
Page 1 of 1
திருவல்லீசுவரர் கோவில்-பாடி
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலமானதால் பாடி என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். பாடிக்கு திருவலிதாயம், திருவல்லீஸ்வரர் என்ற மற்ற பெயர்களும் உண்டு. கருங்குருவிக்கு வலியன் என்ற பெயர் உண்டு.
கருங்குருவி ஈஸ்வரனை வணங்கி வழிபட்டதால் இந்த இடம் வலிதாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் தான் பிள்ளையாருக்கு திருமணம் நடந்தது.
பிரஹஸ்பதி என்ற குரு தன் பாவம் தீர இந்த தலத்திற்கு வந்து சிவனை பூஜித்து விமோசனம் பெற்றார். இந்த ஆலயம் சோழ மன்னர்களால் கட்டப்பெற்றதாகும். மூலஸ்தானம் அரை வட்டமாகவும் பின்புறம் தூங்கும் யானை போலும் கஜபிருஷ்ட வடிவத்தில் உள்ளது.
குருவிற்கும்- குருவிக்கும் உள்ள உறவு:
குருவின் பாவம் தான் என்ன? வேதங்கள் அறிந்தவரும், அமைதியானவரும், ஞானம் நிறைந்தவரும் ஆன குரு பகவான் ஒரு முறை மனதளவில் தவறான எண்ணம் கொண்டார். மகரிஷி உதத்தியர் என்பவர் குருவின் சகோதரர் ஆவார். அவருக்கு மமதை என்ற அழகான, அடக்கமான மனைவியும் உண்டு.
அண்ணன் மனைவியை தாயாய் நினைத்து வந்த வியாழன் மனதில் திடீரென்று ஒரு முறை தவறான எண்ணம் ஏற்பட்டது. சிறிது நேரமே, தன் அண்ணியை தவறான கண்ணுடன் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தார். உடனேயே தனது தவறினை நினைத்து வருந்தி தனது பார்வையை வேறு பக்கம் திருப்பினார்.
அவர் திரும்பிய இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதன் கிளை ஒன்றில் ஒரு கருங்குருவி அழகாய் ஒய்யாரமாக அமர்ந்து இருந்தது. குருவின் பார்வை கருங்குருவியின் மீது பட்டதால், குருவின் வீர்யம் பார்வையாக குருவியின் மீது பட, குருவிற்கு கருங்குருவியின் முகமும், மனித உடலும் கொண்ட ஒரு குழந்தை பிறந்தது. விதி வலியது என்பதற்கேற்ப இந்த உருவம் அமைந்ததை எண்ணி பெருந்தவம் செய்தது.
அண்ணனின் மனைவியை தாயாக நினைக்க வேண்டிய குரு தவறாக நினைத்தது பாவம் என்றும், அதனை போக்க முடிவு செய்து குருவி தவம் செய்யும் என்பதனை அறியாமல் குரு அதே இடத்திற்கு வந்து தவம் செய்தார். குரு ஓரிடமும், குருவி ஓரிடமும் அமர்ந்து, ஜகத்தை காக்கும் ஜகதீஸ்வரரிடம் இவர்களை காக்க தவம் இருந்தனர்.
வேண்டியதைத்தரும் பரம தயாளனான பரமேஸ்வரன் கருணையுடன் குருவிற்கும், குருவிக்கும் காட்சி தந்தார். இத்தலத்தில் தான் ஈசன் குருவிக்கு சுய உருவம் அளித்தார். அந்த கருங்குருவி தான், நான்கு வேதங்களும் கற்றுணர்ந்த பரத்வாஜ மகரிஷியாவார்.
வலியன் என்ற கருங்குருவி வழிபட்டதால் இந்த இடம் வலிதாயம் என அழைக்கப்படும் என்று அருளினார். மனதாலேயே தீய எண்ணம் ஏற்பட்டாலும் அதனை போக்க எண்ணி தவமிருந்த குரு பகவானுக்கு, அவருடைய புகழ் அதிகரிக்க, அவர் செய்த வினை தீர்த்த இந்த தலத்தில் அவரது கீர்த்தி கூடியிருக்கும் என்றும், இத்தலம் குருவிற்கு தனிச்சிறப்பாக அமையும் என்றும் அருளினார்.
போக்குவரத்து வசதி:
இந்த கோவிலுக்கு செல்ல அனைத்து பகுதிகளில் இருந்தும் நேரடி பஸ் வசதி உள்ளது. பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது ஜகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் ஆலயம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கதைபேசி, கானம் பாடி!
» பாடி விளையாடு பாப்பா
» பாடி ஸ்ப்ரே தேர்வு செய்யும் முறை
» 555 படத்திற்காக பாடி பில்டர்.
» பாடி வந்த நிலா
» பாடி விளையாடு பாப்பா
» பாடி ஸ்ப்ரே தேர்வு செய்யும் முறை
» 555 படத்திற்காக பாடி பில்டர்.
» பாடி வந்த நிலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum