கருப்பசாமி கோயில்-சிவகாசி
Page 1 of 1
கருப்பசாமி கோயில்-சிவகாசி
பட்டாசு, தீப்பெட்டிக்கு புகழ்பெற்ற நகரம் சிவகாசி. இங்குள்ள கீழ ரதவீதியில் கோவில் கொண்டிருக்கிறார் கருப்பசாமி. தன்னை நாடிவரும் பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்த்து அருள்கிறார். அது மட்டுமா, இவரின் சன்னதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் எல்லா பிரச்சினைகளும் நீங்கி விடும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களின் இருந்தும் பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
உருட்டு விழியும், முரட்டு மீசையும் கையில் அரிவாளும் கொண்டு ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார் கருப்பசாமி. இருப்பினும் குழந்தைகளின் பயத்தை போக்கி அவர்களை, காத்து-கருப்பு அண்டாதபடி காத்தருளுவதும் கருப்பசாமிதான். ஒவ்வாமை அதாவது அலர்ஜி காரணமாக குழந்தைகள் சரிவர சாப்பிட மாட்டார்கள்.
திடீர், திடீரென பயத்தால் அழுது கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுடன் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து கருப்பசாமியை மன முருக பிரார்த்தித்து கோவிலில் தரும் விபூதியை குழந்தைகளுக்கு பூச வேண்டும்.
தொடர்ந்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கருப்பு மை வைக்கப்பட்டு கருப்பசாமி அருள் பெற்ற தீர்த்தம் (பால்) முகத்தில் தெளிக்கப்படும். இதன்மூலம் குழந்தைகளின் பயம் நீக்கி அவர்கள் வழக்கம்போல் விளையாட தொடங்குவார்கள் என்பது ஐதீகம்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் கருப்பசாமியை வணங்கி மை பூசிக்கொண்டால் தங்களது பிரச்சினைகள் நீங்கி நிம்மதி பெறலாம். கருப்பசாமி கோவிலில் கருப்பாயி அம்மன் சிலையும் உள்ளது. இவரையும் வணங்கி அருள்பெற்றால் தீராத பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள்.
இந்த கருப்பசாமி கோவிலுக்கு வந்து அவரை மனதார பிரார்த்தித்து விட்டு புதிய தொழிலை தொடங்கினால் லாபம் கொழிக்கும், வியாபாரம் செழிக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
போக்குவரத்து வசதி:
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பஸ் மூலம் சிவகாசி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்.சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காசி விஸ்வநாதர் கோவில் - சிவகாசி
» அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

» தீர்த்தபாலீஸ்வரர் கோயில்
» சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum